கெப்பல் முனையத்தில் பிரைம் மூவர் கடலுக்குள் விழுந்து ஓட்டுநர் மரணம் – கடலின் 4மீ ஆழத்தில் இருந்து மீட்பு

Prime mover driver dies vehicle falls sea Keppel Terminal

கெப்பல் பகுதியில் உள்ள துறைமுகமான கெப்பல் டெர்மினல் பெர்த்தில் கனரக வாகனம் கடலில் விழுந்ததில் 44 வயதுடைய நபர் இறந்ததாக கூறப்படுகிறது.

பிரைம் மூவர் கனரக வாகனம் கடலில் விழுந்ததில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 31) காலை அவர் இறந்ததாக அறிவிப்பு செய்யப்பட்டது.

சிங்கப்பூர் டோட்டோ டிராவில் S$7.2 மி. பரிசுத்தொகையை தட்டிச் சென்ற ஒரே ஒருவர் – S$1 க்கு டிக்கெட் வாங்கிய அதிஷ்டசாலி

கடல் பாதுகாப்பு கட்டுப்பாட்டு நிலையத்துக்கு நேற்று அதிகாலை 2 மணியளவில் டிரெய்லர் லாரி சம்பந்தப்பட்ட விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் கடல்சார் மற்றும் துறைமுக ஆணையம் (MPA) கூறியது.

அதன் பின்னர் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) விரைந்து சென்று பிரைம் மூவரில் இருந்து ஓட்டுநரின் உடலை மீட்டது.

ஆனால், அந்த நபர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக SCDF துணை மருத்துவர்கள் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

சுமார் 14 மீட்டர் ஆழத்தில் இருந்து மீட்பு வீரர்கள் அந்த நபரை மீட்டனர்.

சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறை மற்றும் MPA கூறியுள்ளன.

இறந்தவர் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.

சிங்கப்பூர் வேலைவாய்ப்பு: வெளிநாட்டு ஊழியர்களுக்கு செக்? – சிங்கப்பூரர்களுக்கு எகிறும் வேலைவாய்ப்பு