சிங்கப்பூருக்கு வருகிறார் பிரிட்டன் இளவரசர் வில்லியம்!

சிங்கப்பூருக்கு வருகிறார் பிரிட்டன் இளவரசர் வில்லியம்!
Photo: Wikipedia

 

பிரிட்டன் இளவரசர் வில்லியம், நான்கு நாள் பயணமாக நாளை (நவ.05) சிங்கப்பூருக்கு வருகிறார். வரும் நவம்பர் 08- ஆம் தேதி வரை சிங்கப்பூரில் பயணம் மேற்கொள்ளும் பிரிட்டன் இளவரசர் வில்லியம், சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் மற்றும் சிங்கப்பூர் அதிபர் சண்முக ரத்னம் ஆகியோரை இஸ்தானாவில் நேரில் சந்தித்துப் பேசுகிறார்.

சிங்கப்பூருக்குள் நாய் குட்டிகளையும், பூனைக் குட்டிகளையும் கடத்தி முயன்றவருக்கு சிறை!

அதைத் தொடர்ந்து, சிங்கப்பூரின் பல்வேறு சுற்றுலாத் தளங்களுக்கு நேரில் சென்று பார்வையிடும் இளவரசர் வில்லியம், ஜுவல் சாங்கி விமான நிலையத்தையும் பார்வையிடவுள்ளார். அத்துடன், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ளும் இளவரசர் வில்லியம், நவம்பர் 08- ஆம் தேதி சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்புகிறார்.