சிங்கப்பூரில் கொட்டித் தீர்த்த தொடர் கனமழை: பல இடங்களில் திடீர் வெள்ளம்

Singapore rainy weather persists
(Photo: Ooi Boon Keong)

சிங்கப்பூரில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 27) பிற்பகல் தொடர்ந்த கனமழை காரணமாக பல இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.

Ubi Avenue 3 மற்றும் Eunos Link சந்திப்பிலும், Pan Island Expressway (PIE) ஸ்லிப் ரோடு நுழைவு மற்றும் பெடோக் நார்த் அவென்யூ 3 ஆகிய இடங்களிலும் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த இரு ஊழியர்களை தூக்கிய போலீஸ் – பரபரப்பான விமான நிலையம்!

பொதுப் பயனீட்டுக் கழகம் (PUB) கூறுகையில்; வாகன ஓட்டிகளுக்கு உதவி வழங்கவும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கும் அதன் குழுக்கள் போக்குவரத்து காவல்துறையுடன் இணைந்து அங்கு நிறுத்தப்பட்டதாகவும் கூறியது.

அதன் பின்னர், பிற்பகல் வேளையில் அந்த இடங்களில் திடீர் வெள்ளம் வடிய தொடங்கியதாக PUB தெரிவித்தது.

இதன் காரணமாக பல பகுதிகளுக்கு திடீர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த மழைபொழிவானது பிப்ரவரி மாத சிங்கப்பூரின் சராசரி மழையின் அளவு 135 சதவீதத்துடன் ஒத்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் வரும் பயணிகளுக்கு SHN, Travel History காலம் என்ன? – மேலும் நடப்பில் உள்ளதை அறிவோம்