வேலைக்கு வந்த இடத்தில் இது தேவையா.. சமூக வலைத்தளத்தில் “வட்டிக்கு கடன்” என விளம்பரம் செய்த வெளிநாட்டவர்

promoting loan shark services tiktok maid charged

சமூக வலைத்தளம் வழியே வட்டிக்கு கடன் வழங்கும் விளம்பரம் செய்து வந்த வெளிநாட்டு பணிப்பெண் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சமூக ஊடக தளமான TikTok இல் அவர் வட்டிக்கு கடன் வழங்கும் வணிகத்தை விளம்பரப்படுத்தி வந்ததாக சந்தேகிக்கப்பட்டது.

அழுகிய மற்றும் தொங்கி நிலையில் கண்டெடுக்கப்பட்ட 36 வயதுமிக்க ஆடவர்

இந்தோனேஷியாவைச் சேர்ந்த ஐடா யூலியாட்டி (43) என்ற அந்த பணிப்பெண் மீது, உரிமம் பெறாத வட்டிக்காரர்களுக்கு உதவியதாக ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

2023 ஆம் ஆண்டு ஜூன் 14 மற்றும் ஜூன் 25 க்கு இடையில், 20 கடன் விளம்பரங்களை அவர் டிக்டாக்கில் வெளியிட்டதாக சொல்லப்பட்டுள்ளது.

மேலும், 2023 ஜூன் மற்றும் ஆகஸ்ட்க்கு இடையில் 10 க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நேற்று (பிப்ரவரி 27) காவல்துறை தெரிவித்தது.