சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு மோசடி – வேலை தேடுபவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சிங்கப்பூர் அரசாங்கத்தின் பொதுச் சேவை பிரிவு அறிவுறுத்தல்

job scam in singapore

சிங்கப்பூர் அரசாங்கத்தின் வேலைவாய்ப்பு இணையதளமான Careers@Gov போர்ட்டலில் வேலை வாய்ப்புகள் வெளியிடப்படுகின்றன .அரசாங்கத்தின் இணையப்பக்கத்தில் வெளியிடப்படும் வேலைவாய்ப்புகளை மற்றொரு மோசடி இணையதளம் மறுபதிவு செய்ததை தொடர்ந்து காவல் துறையின் அறிக்கை வெளியிடப்பட்டதாக வியாழக்கிழமை (April 21) பிரதமர் அலுவலகத்தின் பொதுச் சேவை பிரிவு (PSD) தெரிவித்துள்ளது.

இந்த பொதுச்சேவை பிரிவு, jobsingapore24h.com என்ற இணையதளத்தின் உரிமையாளரை தொடர்பு கொண்டு ,சிங்கப்பூர் பொது சேவை தொடர்பான அனைத்து வேலைவாய்ப்பு பதிவுகளையும் நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த விவகாரம் குறித்து காவல்துறையில் ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டிருப்பதால் , தற்பொழுது விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

வேலை தேடுபவர்களுக்கு பாதுகாப்பான வழிமுறை மற்றும் ஆலோசனைகளையும் PSD வழங்கியுள்ளது.வேலை தேடுபவர்கள் வேலைவாய்ப்பு ஏஜென்சிகளின் ஆட்சேர்ப்பு இணையதளங்கள் மற்றும் Careers@Gov போர்ட்டலில் பொதுச்சேவை வேலை வாய்ப்புகளுக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

அங்கீகரிக்கப்படாத தளங்களில் வேலைவாய்ப்பிற்காக தனிப்பட்ட விவரங்களை உள்ளிட்டு விண்ணப்பங்களை சமர்ப்பிப்பது தகவல் திருட்டு அல்லது மோசடி மற்றும் அடையாள திருட்டு போன்றவற்றிற்கு வழிவகுக்கும் என்று PSD நினைவூட்டுகிறது.வேலை தேடுபவர்கள் வேலைவாய்ப்பு குறித்து சம்பந்தப்பட்ட பொது நிறுவனங்களிடம் விசாரித்து சரி பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறியது.

வேலைவாய்ப்பு மோசடியில் கடந்த 2021ஆம் ஆண்டு , குறைந்தபட்சம் S$91 மில்லியன் டாலர்கள் ஏமாற்றப்பட்டுள்ளன.இந்த வருட ஆரம்பத்திலிருந்து 189 வேலைவாய்ப்பு மோசடி வழக்குகளை பார்த்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.