பிஎஸ்எல்வி- சி55 ராக்கெட் ஏவுதல் வெற்றி…. சிங்கப்பூரின் செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்!

Photo: ISRO

ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி- சி55 ராக்கெட்டை இன்று (ஏப்.22) பிற்பகல் 02.19 மணிக்கு வெற்றிகராக விண்ணில் ஏவியது இஸ்ரோ. சிங்கப்பூரைச் சேர்ந்த இரண்டு செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி- சி55 (PSLV- C55) ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.

துபாயில் இருந்து சென்னைக்கு இப்படியும் தங்கத்தைக் கடத்தி வந்த பயணி… அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி (வைரலாகும் வீடியோ)

750 கிலோ எடைக் கொண்ட டெலியோஸ் (TeLEOS-2) செயற்கைக்கோளானது புவி ஆய்வு, இயற்கை பேரிடர் கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு உதவும். செயற்கை துளை ரேடார் மூலம் 1 மீட்டர் தெளிவுத் திறனில் தரவை வழங்கும் திறன் கொண்டது டெலியோஸ். அதேபோல், 16 கிலோ எடைக் கொண்ட லுமிலைட்- 4 என்ற சிறிய செயற்கைக்கோளும் விண்ணில் ஏவப்பட்டது.

இஸ்ரோ விண்ணில் ஏவிய பிஎஸ்எல்வி- சி55 ராக்கெட்டில் இருந்து முதல் பாகம் வெற்றிகரமாகப் பிரிந்த நிலையில், சிங்கப்பூரின் செயற்கைக்கோள்களை இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தினர்.

ஸ்ரீ மாரியம்மன் கோயிலில், ஸ்ரீ மாரியம்மனுக்கு 1008 சங்காபிஷேக பூஜை!

பிஎஸ்எல்வி- சி55 ராக்கெட் வெற்றியைத் தொடர்ந்து, இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.