விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட சிங்கப்பூர் செயற்கைக்கோள்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்!

விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட சிங்கப்பூர் செயற்கைக்கோள்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்!
Photo: ISRO

 

சிங்கப்பூரின் ஏழு செயற்கைக்கோள்களுடன் ‘PSLV-C56’ ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. புவிச் சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள்கள், நிலைநிறுத்தப்பட்டச் சூழலில் அவற்றின் பயன்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.

இருவேறு விபத்துகள்.. குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய ஒருவர் கைது

ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து ‘PSLV- C56’ ராக்கெட் சிங்கப்பூரின் DS-SAR மற்றும் ஆறு சிறிய செயற்கைக்கோள்களுடன் இன்று (ஜூலை 30) காலை 06.30 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

24 நிமிடங்கள் திட்டமிட்டப்படி பயணித்த ராக்கெட், சிங்கப்பூரைச் சேர்ந்த ‘DS-SAR’ என்ற செயற்கைக்கோளை 535 கிலோ மீட்டர் உயரத்தில், புவிச் சுற்றுப்பாதையில் முதலில் நிலை நிறுத்தியது. இதனைத் தொடர்ந்து, மற்ற செயற்கைக்கோள்களும் அடுத்தடுத்து, புவிச் சுற்றுப்பாதைகளில் அடுத்தடுத்து நிலை நிறுத்தப்பட்டன.

சிங்கப்பூர் அரசு மற்றும் ‘ST Engineering’ நிறுவனத்தின் கூட்டாண்மையின் கீழ் உருவாக்கப்பட்ட 530 கிலோ எடைக்கொண்ட ‘DS-SAR’ என்ற செயற்கைக்கோள், இஸ்ரேலின் ஏரோ ஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் உருவாக்கிய நவீன ரேடார் கருவியைக் கொண்டுள்ளது. அனைத்து வானிலை தகவல்களையும், துல்லியமான படங்களையும் வழங்கும் திறன், இந்த செயற்கைக்கோளில் உள்ளதாகவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இது தவிர 23 கிலோ எடைக் கொண்ட ‘VOLEX-AM’ தொழில் நுட்ப விளக்க மைக்ரோ செயற்கைக்கோள், ‘ARCADE’ என்ற வளிமண்டல இணைப்பு மற்றும் இயக்கவியல் செயற்கைக்கோள், ‘SCOOB-II’ என்ற 3யு நானோ செயற்கைக்கோள், Galassia-2 என்ற 3யு நானோ செயற்கைக்கோள், ‘ORB-12 STRIDER’ ஸ்ட்ரைடர் செயற்கைக்கோள் உள்ளிட்ட ஆறு செயற்கைக்கோள்களுடன் திட்டமிட்டப்படி, அவற்றின் புவிச்சுற்றுப் பாதைகளில் நிலைநிறுத்தப்பட்டனர்.

வெளிநாட்டு ஊழியரின் உயிர் காக்க உதவுங்கள்: வேலையிடத்தில் விபத்து… ஆபத்தான நிலையில் ஊழியர் – உறவுகளை தேடும் நிறுவனம்

நிலைநிறுத்தப்பட்ட செயற்கைக்கோள்களின் செயல்பாடுகளை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். சந்திரயான்-3 விண்கலம் ஏவப்பட்ட 15 நாட்களில் மற்றொரு ராக்கெட் பயணத்தை இஸ்ரோ வெற்றிகரமாக முடித்துள்ளது விஞ்ஞானிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.