PSP நடத்திய தேசிய தின விருந்து – எதிர்க்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் உட்பட 400 பேர் கலந்து கொண்டனர் !

PSP national day dinner

ப்ராக்ரஸ் சிங்கப்பூர் கட்சி (PSP) நடத்திய தேசிய தின விருந்தில் மற்ற எதிர்க்கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். சுமார் 400 விருந்தினர்களில் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் (SDP) தலைவர் பால் தம்பையா மற்றும் People’s Voice தலைவர் லிம் டீன் ஆகியோரும் இந்த விருந்தில் இருந்தனர்.

மேலும் சீர்திருத்தக் கட்சி, சிங்கப்பூர் ஜனநாயகக் கூட்டணி மற்றும் தேசிய ஒற்றுமைக் கட்சியின் (என்எஸ்பி) உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இது குறித்து PSP பொதுச் செயலாளரான பிரான்சிஸ் யுவன் கூறுகையில், சிங்கப்பூரை மேம்படுத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் பொதுவான விருப்பத்தின் சின்னம் இது என்றார்.

தொழிலாளர் கட்சியின் (WP) தேசிய தின கொண்டாட்டங்கள் நடைபெற்ற அதே இரவில் ஜூரோங் கிழக்கில் உள்ள பெங் ஹியாங் உணவகத்தில் இந்த இரவு உணவு விருந்து நடைபெற்றது. மேலும் மோதல் இல்லாவிட்டால், WP இன் உறுப்பினர்களும் அழைக்கப்பட்டிருப்பார்கள் என்றும் யுவன் கூறினார்.