“வேண்டும் வேண்டும் சம்பளம் வேண்டும்” – வெளிநாட்டு ஊழியர்கள் பதாகையுடன் போராட்டம்

migrant workers employed by Shanghai Chong Kee use personal savings for food, transport

ஆங் மோ கியோவில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றின் நுழைவு வாயில், வெளியேறும் பகுதியை தடுத்து போராட்டம் செய்ததாக ஒன்பது ஊழியர்கள் பிடிபட்டுள்ளனர்.

இன்று செவ்வாய்க்கிழமை மதியம் 1.50 மணியளவில் நடந்த இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

“வெளிநாட்டு ஊழியர்களுக்கு பதில் சிங்கப்பூரர்களை எடுக்கலாமே” – சிங்கப்பூரர்கள் வாதம்: துணைப் பிரதமர் விளக்கம்

5 ஆங் மோ கியோ ஸ்ட்ரீட் 62ல் இந்த சம்பவம் நடந்தது. 28 முதல் 54 வயதுக்குட்பட்ட அவர்கள் வெளிநாட்டு ஊழியர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

சம்பளம் வேண்டும்..! என பதாகைகளை ஏந்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களை தடுத்து நிறுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் அனுமதியின்றி பொது கூட்டம் கூடுவது குற்றமாகும், இந்த குற்றத்திற்கு S$3,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

சிங்கப்பூரில் வாரத்தில் 4 நாள் வேலை… எங்களுக்கு இந்த முறை வேண்டும் ஊழியர்கள் ஆர்வம் – பின்வாங்கும் நிறுவனங்கள்