சிங்கப்பூரில் ஏற்பட்ட விபத்தில் காலை இழந்த தமிழக ஊழியருக்கு நீங்க நேரடியா உதவி செய்யலாம் – முழு விவரம்

ItsRainingRaincoats/FB

வெளிநாட்டு ஊழியருக்கு உதவும் நல அமைப்பான ItsRainingRaincoats (IRR) கடந்த ஆண்டில் ஏற்பட்ட வேலையிட விபத்தில் தனது காலை இழந்த 24 வயதான வெளிநாட்டு ஊழியருக்கு நேரடியாக தனது உதவியை வழங்கி வருகிறது.

பொதுமக்களின் நன்கொடைகள் ஊழியருக்கு நேரடியாக செல்லும் என்பதை ItsRainingRaincoats உறுதிப்படுத்தியுள்ளது.

போலீசிடம் “உங்கள் சம்பளத்தை நாங்கள் செலுத்துகிறோம்..****” என தகாத முறையில் பேசிய இந்திய ஆடவருக்கு அபராதம்!

வினோத் என்ற அந்த தமிழக ஊழியர் மற்றும் குழுவினர் இரும்புத் தகடுகளை இறக்கிக்கொண்டிருந்தபோது, ​​ஒரு தகடு விழுந்ததில் அவரது கால் துண்டிக்கப்பட்டது.

IRR அமைப்பும் பொதுமக்களிடமிருந்து உதவிகளை பெற்று அதனை ஒழுங்கமைத்து வினோத்துக்கு உதவ முயற்சி செய்துள்ளது.

உதவ விரும்புவோர் Facebook பக்கத்தில் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்ளுமாறு ItsRainingRaincoats கேட்டுக் கொண்டுள்ளது.

முழு செய்தி : சிங்கப்பூரில் விபத்தில் சிக்கி காலை இழந்த தமிழக ஊழியர்: “நம்ம ஊழியருக்கு நாம தான் உதவனும்” – முழு ரிப்போர்ட்