சிங்கப்பூரின் 2024 ஆம் ஆண்டின் நீண்ட விடுமுறைகள் வெளியீடு – ஊழியர்கள் என்ஜாய்

public holiday Singapore 2024

அடுத்த 2024 ஆம் ஆண்டிற்கான சிங்கப்பூரின் பொது விடுமுறை நாட்களை மனிதவள அமைச்சகம் இன்று புதன்கிழமை (மே 24) வெளியிட்டுள்ளது.

அதில் ஐந்து நீண்ட வார இறுதி நாட்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த பொது விடுமுறையில் ஐந்து நாட்கள் – வெள்ளி, ஞாயிறு அல்லது திங்கட்கிழமைகளில் வருகிறது.

சீனப் புத்தாண்டு முடிந்து இரண்டாவது நாள் ஞாயிற்றுக்கிழமை வருவதால், அதற்க்கு அடுத்த நாள் திங்கட்கிழமை பொது விடுமுறையாக இருக்கும்.

Singapore Pools கடையில் டிக்கெட் வாங்க சென்றவருக்கு அடி.. மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணம்

திங்கட்கிழமை இரண்டு பொது விடுமுறைகள்:

  • புத்தாண்டு தினம் (ஜனவரி 1)
  • ஹஜ் பெருநாள் (ஜூன் 17)

வெள்ளிக்கிழமையன்று இரண்டு பொது விடுமுறை நாட்கள்:

  • புனித வெள்ளி (மார்ச் 29)
  • தேசிய தினம் (ஆகஸ்ட் 9)

ஒரு விடுமுறை ஞாயிற்றுக்கிழமை வருகிறது:

  • சீனப் புத்தாண்டின் இரண்டாம் நாள் (பிப். 11)

மற்ற விடுமுறைகள்:

  • சீனப் புத்தாண்டின் முதல் நாள் (பிப். 10)
  • நோன்பு பெருநாள் (ஏப். 10)
  • தொழிலாளர் தினம் (மே 1)
  • விசாக தினம் (மே 22)
  • தீபாவளி (அக் 31)
  • கிறிஸ்துமஸ் (டிசம்பர் 25)