முகக்கவசம் அணிய மறுத்து, பாதுகாப்பு இடைவெளி தூதரை நோக்கி நடுவிரலை காட்டியவர் கைது

ஊழியர்களின் ஆலோசனையையும் மீறி சென்தோசாவில் உள்ள சிலசோ பீச் வாக் (Siloso Beach Walk) பகுதியில் முகக்கவசம் அணிய மறுத்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு இடைவெளி தூதரின் அறிவுரைக்கு இணங்காமல், நடுவிரலை சுட்டிக்காட்டியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் மரமேடை மிதப்பில் இருந்து தண்ணீருக்குள் பாயும் பெரிய முதலை – வைரல் காணொளி!

கடந்த வியாழக்கிழமை இரவு 7.50 மணியளவில் இந்த வழக்கு குறித்து தகவல் கிடைத்ததாக இன்றைய (மார்ச் 13) செய்தி வெளியீட்டில் காவல்துறை தெரிவித்துள்ளது.

அவர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும். பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்த குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம், அபராதம் S$2,000 அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

கூடுதலாக, பாதுகாப்பு இடைவெளி தூதரிடம் தவறான நடத்தை காரணமாக, அவர் ஆறு மாதங்கள் வரை சிறையில் அடைக்கப்படலாம், S$5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

பொது இடத்தில் முகக்கவசம் அணியத் தவறி COVID-19 விதிமுறைகளை மீறிய குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அதேபோன்ற தண்டனையுடன் அவருக்கு அதிகபட்சமாக S$10,000 அபராதம் விதிக்கப்படலாம்.

மினிபஸ், மோட்டார் சைக்கிள் மோதி விபத்து – சம்பவ இடத்தில் ஒருவர் மரணம்!