சிங்கப்பூரில் தீவு முழுவதும் பொது எச்சரிக்கை ஒலி – பொதுமக்கள் பீதியடைய வேண்டாம்

AFP/Roslan Rahman

சிங்கப்பூரில் வரும் பிப். 15 மாலை 6.20 மணிக்கு, தீவு முழுவதும் PWS சைரன்கள் மூலம் முக்கிய தகவல் சமிக்ஞையை சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படை SCDF ஒலிக்கும்.

தீவு முழுவதும் இந்த சமிக்ஞையை, ஆண்டு தோறும் பிப்ரவரி 15 மற்றும் செப்டம்பர் 15 ஆகிய தேதிகளில் மாலை 6.20 மணிக்கு SCDF ஒலிக்கும்.

வெற்றிகரமாக சிங்கப்பூர் வந்தடைந்த Paxlovid மாத்திரையின் முதல் தொகுதி – யார் யாருக்கு?

SGSecure செயலி பதிவிறக்கம் செய்யப்பட்ட கைப்பேசி மற்றும் Silent அல்லது Vibration தேர்வு செய்யாமல் இருக்கும் அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் இந்த சமிக்ஞை ஒலிக்கும்.

முக்கிய தகவல் சமிக்ஞையை நீங்கள் கேட்கும்போது, ​​PWS பற்றி இரண்டு நிமிட செய்தியை பெற ஏதேனும் உள்ளூர் வானொலி நிலையம் அல்லது தொலைக்காட்சி சேனலுடன் உடனடியாக இணையுங்கள்.

இதனால் பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என்றும் SCDF கூறியுள்ளது.

ஏன் இந்த ஒலி?

1942ஆம் ஆண்டில் ஜப்பானியர்களிடம் சிங்கப்பூர் வீழ்ந்த நாளான பிப்ரவரி 15ம் தேதி, சிங்கப்பூரின் “முழு தற்காப்பு தினம்” ஆகும்.

ஒவ்வொரு ஆண்டும், அந்த தினத்தை நினைவுகூரும் வகையில் பொது எச்சரிக்கை அமைப்பின் முக்கிய செய்தி ஒலிக்கப்படுகிறது.

சிங்கப்பூரில் கல்லூரி வளாகத்தில் இறந்து கிடந்த 19 வயது மாணவி… என்ன நடந்தது?