உங்களுக்கு வழிகாட்ட ஆங்காங்கே சாலையில் பலகைகள் ! – சிங்கப்பூரில் புதிதாக திறக்கப்படும் போக்குவரத்து இணைப்பு!

singapore road

சிங்கப்பூரின் சாலைப் போக்குவரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.புக்கிட் பாஞ்சாங் பகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் விரைவில் கிராஞ்சி விரைவுச் சாலைக்குச் செல்ல அமைக்கப்பட்டுள்ள இரண்டு துணைச் சாலைகள் இம்மாதம் 17-ஆம் தேதி திறக்கப்படும்.

சென்ஜா சாலை,KJE சாலை ஆகிய இடங்களில் உள்ள போக்குவரத்தை இந்த இரண்டு சாலைகளும் இணைக்கும்.இந்தாண்டின் தொடக்கத்திலிருந்து இந்த இணைப்பு கட்டங்கட்டமாகத் திறக்கப்பட்ட்டது.கிராஞ்சி விரைவுச் சாலைக்கு நேரடியாகச் செல்ல இந்த இணைப்பு பயன்படுகிறது.

இரண்டு மேம்பாலங்களை உள்ளடக்கிய இணைப்பின் வழியாக சென்ஜா,புக்கிட் பாஞ்சாங் போன்ற பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் எளிதாக கிராஞ்சி விரைவுச் சாலையைச் சென்றடைய முடியும்.சுமார் ஐந்து ஆண்டு பணிகளுக்கு பின்னர் இணைப்பு பயன்பாட்டிற்கு வருகிறது.

போக்குவரத்து இணைப்புக்கான பணிகள் கடந்த 2017-ஆம் ஆண்டு நவம்பரில் தொடங்கப்பட்டன.துணைச் சாலைகள் இரண்டும் திறக்கப்படுவதற்கு முன்பு,வாகன ஓட்டிகளுக்கு வழிகாட்டும் வகையில் போக்குவரத்து அறிவிப்புப் பலகைகள் ஆங்காங்கே வைக்கப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.