இந்த விலைதான் நமக்குக் கட்டுப்படியாகும்! – செஞ்சா உணவங்காடியில் குவியும் மக்கள்!

hotels in singapore
l hotels in singapore

நடுத்தர வர்க்கத்தினருக்கும் கட்டுப்படியாகும் விலையில் பொருட்களை விற்பனை செய்யும் அங்காடி வாடிக்கையாளர்களால் நிறைந்து காணப்படுவது வழக்கம் தான்.சிங்கப்பூரின் புக்கிட் பாஞ்சாங்கில் உள்ள செஞ்சா உணவங்காடி நேற்று திறக்கப்பட்டவுடன் நான்காயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர்.

மொத்தம் 28 உணவகங்கள் இடம்பெற்றுள்ளன.மிஷேலின் தகுதி பெற்ற பிரபல உணவகமும் இவற்றில் உள்ளடங்கும்.இந்த உணவங்காடி ஒரு சமூக நிறுவனமாக செயல்படுகிறது.இங்கு அனைவருக்கும் கட்டுப்படியாகும் விலையில் பலதரப்பட்ட உணவு வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன.

2.80 வெள்ளி அல்லது 3.50 வெள்ளியிலிருந்து பிரதான உணவின் விலை ஆரம்பமாகிறது.Fair Price குழுமம் நடத்தும் செஞ்சா உணவங்காடியில் முதல்முறையாக ‘வாரோங் ரைஸ் கார்டன்’ உணவும் விற்பனை செய்யப்படுகிறது.

இரண்டு வெள்ளிக்கு ‘நாசி சம்போர்’ என்று மாலாயில் குறிப்பிடப்படும் உணவு விற்பனை செய்யப்படுகிறது.ஒவ்வொரு உணவு வகையும் வழக்கமான விலையை விட குறைவாக இருப்பதால் நேற்று மாலை மூன்று மணி வரை நிலையத்தில் கூட்டம் குவிந்து காணப்பட்டது.