அடுத்தடுத்த நாள் இறந்த இரண்டு நாய்க்குட்டிகள்! – மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த குட்டிகளுக்கு வயிற்றுப்போக்கு!

puppy died virus singapore malaysia

சிங்கப்பூருக்கு வாங்கிவரப்பட்ட இரண்டு கார்கி இன நாய்க்குட்டிகள் ஒரு வாரத்திற்குள் உயிரிழந்துள்ளன.குமாரி சென் என்பவர் மலேசியாவில் அங்கீகரிக்கப்படாத விற்பனையாளரிடமிருந்து இரண்டு நாய்க் குட்டிகளையும் வாங்கியதாகக் கூறினார்.

கால்நடை மருத்துவச்சேவை ஆணையம் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.நாய்க்குட்டிகளுக்கு உணவு மற்றும் விநியோகச்செலவு போன்றவற்றை மொத்தம் சேர்த்து $6,400 தொகையை விற்பனையாளருக்கு குமாரி அனுப்பியுள்ளார்.

இரண்டு நாய்க்குட்டிகளும் அக்டோபர் 27-ஆம் தேதி சிங்கப்பூரில் உள்ள அவரது வீட்டிற்கு விநியோகிக்கப்பட்டன.ஆனால் மறுநாளில் இருந்து இரண்டு நாய்க்குட்டிகளும் நோய்வாய்ப்பட்டு வயிற்றுப்போக்கு,வாயில் நுரை தள்ளுதல் போன்றவற்றால் அவதிப்பட்டன.

இரண்டு குட்டிகளுக்கும் கேனைன் பார்வோ வைரஸ் என்னும் தொற்று நோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டது.இரண்டு நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நவம்பர் 2 மற்றும் 3-ஆம் தேதி அடுத்தடுத்த நாள் உயிரிழந்தன.

நாய்க்குட்டிகளை விற்றவருக்கு தொடர்பு செய்து பணத்தைத் திருப்பித்தர கோரினார்.ஆனால் அவர் மறுத்துவிட்டார்.மலேசியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட இரண்டு நாய்க்குட்டிகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டதாகக் கூறினாலும் அதற்கான ஆதாரம் அவரிடம் இல்லை என்று குமாரி சுட்டிக்காட்டினார்.