இயற்கையின் போக்கில் மனிதர்கள் இடையூறு செய்தால் என்ன நேரும்? – தனது உணவை இழந்த மலைப்பாம்பு;பூனைக்காக வருத்தப்படும் குடியிருப்பாளர்கள்

python-strangle-cat-jurong-west
சிங்கப்பூரின் ஜூரோங் வெஸ்டில் ஒரு மலைப்பாம்பு பூனையை சுற்றியிருக்கும் காட்சியை படம்பிடித்து முகநூலில் பதிவிட்டுள்ளனர்.மலைப்பாம்பு பூனையின் உடலை இறுக்கிச் சுற்றியதில் பூனை உயிரிழந்து விட்டது.இந்த முகநூல் பதிவைப் பார்தவர்களிடையே சூடான விவாதங்கள் நிகழ்ந்தன.
பாம்பு தனது இரைக்காக பூனையை வளைத்துச் சுற்றியதாகவும் பின்னர் அங்கு நிகழ்ந்த மனித தலையீட்டினால் பூனையின் சடலம் அப்படியே விடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சிலர் பூனை ஒன்று பாம்பினால் கொல்லப்பட்டதாகக் கோபமடைந்தனர்.மற்றொரு தரப்பினர் உணவை உட்கொள்வதற்காக மட்டுமே பாம்பு இரையைப் பிடித்தது என்று வாதிட்டனர்.சிங்கப்பூரின் நகர்ப்புறங்களில் மலைப்பாம்புகள் பூர்வீகமாக இருக்கின்றன.
இதற்கு முன்பு நவம்பர் 2018 இல் ஜூரோங் வெஸ்டில் ஒரு மலைப்பாம்பு பூனையை தின்று கொண்டிருந்தது.அப்போது இயற்கையை தடுக்கும் விதமாக மனித தலையீடு ஏற்பட்டதால் மலைப்பாம்பு அதன் இரையை இழக்க நேரிட்டது.

பூனைகளை மலைப்பாம்புகள் இரையாக உண்ணும் சம்பவம் குடியிருப்பாளர்களை வருத்தமடையச் செய்தாலும், இரண்டு விலங்குகளும் இந்த நகர்ப்புற நகரத்தின் சுற்றுச்சூழல் அமைப்பின் ஒரு பகுதியாகும்.
எலிகள் போன்ற சிறிய விலங்குகளையும், சில சமயங்களில் பூனைகளையும் கூட பாம்புகள் வேட்டையாடுகின்றன.

மலைப்பாம்புகளைக் காண்பவர்கள் 9783 7782 என்ற எண்ணில் ஏக்கர் வனவிலங்கு மீட்பு ஹாட்லைனை அழைக்கலாம் அல்லது 1800-476-1600 என்ற எண்ணில் NParks அழைக்கலாம்.
மரங்கள், புதர்கள் அல்லது வடிகால்களில் பாம்புகள் காணப்பட்டால், அவை அதற்கான இயற்கை வாழிடங்கள் என்பதால் அவற்றை தனியாக விட்டுவிட வேண்டும் என்று குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.