சிங்கப்பூருக்குள் இரு மலைப்பாம்புகளை கடத்திய ஓட்டுனருக்கு S$5,000 அபராதம்

pythons euthanised illegal smuggling driver fined
ICA and NParks

துவாஸ் சோதனைச் சாவடி வழியாக சிங்கப்பூருக்குள் இரு மலைப்பாம்புகளை கடத்திய குற்றத்திற்காக ஓட்டுநர் ஒருவருக்கு S$5,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

முறையான சுற்றுசூழலில் வைக்காத காரணத்தால் இரண்டு மலைப்பாம்புகளும் கடுமையான முறையில் மீளமுடியாத சுகாதார நிலைக்கு தள்ளப்பட்டதை அடுத்து அவை கருணைக்கொலை செய்யப்பட்டன.

வெளிநாட்டு ஊழியர்கள், பணிப்பெண்கள் ஓய்வெடுக்கும் இடத்தில் பல மாதங்களாக வேவு பார்க்கும் ஆடவர்!

இதில் 51 வயதான புலேந்திரன் பழனியப்பன், அனுமதியின்றி அதனை இறக்குமதி செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

மலைப்பாம்புகள் பாதுகாப்பான முறையில் கொண்டு செல்ல உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதற்காக மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் பரிசீலிக்கப்பட்டன.

கடந்த ஏப்.7 அன்று, பழனியப்பன் ஓட்டி வந்த மலேசிய பதிவு பெற்ற கண்டெய்னர் லாரியை குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதன் பின்னர் அவை பறிமுதல் செய்யப்பட்டன.

கைபேசியை கொள்ளையடித்த இருவர்… CCTV வைத்து, ஆறு மணி நேரத்திற்குள் தட்டி தூக்கிய போலீஸ் – காத்திருக்கும் 12 பிரம்படி