உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றது அர்ஜென்டினா… நனவானது மெஸ்ஸியின் கனவு!

Twitter Image

22வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.

பத்மநாபபுரம் அரண்மனையைச் சுற்றிப் பார்த்த சிங்கப்பூர் அமைச்சர்!

கோடிக்கணக்கான கால்பந்து ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கத்தார் நாட்டின் லூசைல் மைதானத்தில் (Lusail Stadium) களைக்கட்டியது உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம். ஆட்டத்தில் 23 நிமிடத்தில் கிடைக்கப் பெற்ற பெனால்ட்டி வாய்ப்பை அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸி நேர்த்தியாக கோல் அடித்தார்.

அவரைத் தொடர்ந்து, 36வது நிமிடத்தில் ஏஞ்சல் டி மரியா பிரான்ஸ் அணியின் தடுப்புகளைத் தகர்த்து அர்ஜென்டினா அணிக்கான இரண்டாவது கோலைப் பதிவு செய்தார். இதனால் முதல் பாதி ஆட்டம் 2-க்கு பூஜ்ஜியம் என அர்ஜென்டினா முன்னிலையில் இருந்தது.

இரண்டாம் பாதியில் தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக விளையாடிய பிரான்ஸ் அணியின் வீரர்கள் கோல் அடிக்க முயன்றும், பலன் அடிக்கவில்லை. ஆனால், பிரான்ஸ் அணியின் வீரர் எம்பாப்வே ஒட்டுமொத்த ஆட்டத்தையும் மாற்றிய நேரம் தான் 80வது நிமிடம். அர்ஜென்டினா கொடுத்த பெனால்ட்டி வாய்ப்பை நேர்த்தியாக கோலாக மாற்றினார்.

மூன்று வண்ணங்களில் ‘டிக்’… ட்விட்டரில் புதிய மாற்றம்!

அதோடு நிற்காமல், அடுத்த நிமிடமே மற்றொரு கோலை அடித்து அசத்தினார் எம்பாப்வே, இரண்டு அணிகளும் தலா இரண்டு கோல்களுடன் ஆட்டம் நகர்ந்ததால், போட்டி விறுவிறுப்படைந்தது. கடைசி நிமிடத்தில் கோல் அடிக்க கிடைத்த எளிதான வாய்ப்பை அர்ஜென்டினா அணியின் வீரர்கள் தவறவிட்டனர். இதனால் கூடுதல் நேரம் வரை சென்ற ஆட்டத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடிக்க, 3- 3 என்ற கோல் கணக்கில் சமன் பெற்றதால், பெனால்ட்டி ஷூட் அவுட் முறைக் கடைப்பிடிக்கப்பட்டது.

இதில் 4- 2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தியது. மூன்றாவது முறையாக, உலகக் கோப்பை காலபந்து சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது அர்ஜென்டினா. அந்த அணிக்கு பரிசுத் தொகையாக ரூபாய் 342 கோடி வழங்கப்பட்டது.

உலகக் கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டத்தை வென்று விட்டு ஓய்வு பெறுவேன் என்ற மெஸ்ஸியின் கனவும் நனவானது. நடப்பு தொடரில் 7 கோல்களை அடித்த மெஸ்ஸி, சக வீரர்கள் மூன்று கோல்களை அடிக்கவும் உதவினார். அர்ஜென்டினா அணி கோப்பையை வெல்ல உறுதுணையாக இருந்த மெஸ்ஸி, தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு தங்கப்பந்து விருது வழங்கப்பட்டது.

அடேங்கப்பா! சாங்கி விமான நிலையத்தில் குவியும் பயணிகள்! – அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் உரை

8 கோல்களை அடித்த எம்பாப்பேவுக்கு தங்கக்காலணி விருது வழங்கப்பட்டது. அர்ஜென்டினா அணியின் வெற்றியை, உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.