சிங்கப்பூர் மீதான கட்டுப்பாடுகளை நீக்கிய இந்தியா: மீண்டும் தொடங்கும் தனிமை இல்லா விமான சேவை!

AP/Rishi Lekhi

சிங்கப்பூரில் இருந்து வரும் பயணிகள் தனிமைப்படுத்தப்படாமல் இந்தியாவிற்கு பறக்க முடியும் என்றும், இரு நாடுகளுக்கு இடையே தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு தனிமைப்படுத்தப்படாத பயணத்தை மீண்டும் வழங்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஓமிக்ரான் கிருமியின் அச்சத்தை தொடர்ந்து, கோவிட் -19 நோய்த்தொற்றுகள் அதிக ஆபத்து உள்ளதாக இந்தியாவால் கருதப்பட்ட நாடுகளின் பட்டியலில் கடந்த மாதம் சிங்கப்பூர் சேர்க்கப்பட்டது.

ION ஆர்ச்சர்ட் மாலில் உள்ள கை உலர்த்தி இயந்திரத்தை பயன்படுத்திய சிறுமியின் விரல் துண்டிப்பு

இதனால் டிசம்பர் 1 முதல் இந்தியாவுக்கு வரும் பயணிகள் மற்ற கட்டுப்பாடுகளுடன் சேர்த்து ஏழு நாட்களுக்கு வீட்டு தனிமைப்படுத்தலை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

ஆனால், அந்த பட்டியலிலிருந்து சிங்கப்பூரை, இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வியாழக்கிழமை (டிசம்பர் 9) நீக்கியது.

இதனால், சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகள் சுதந்திரமாக பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்பது இதன் பொருள். ஆனால் இந்தியா வந்த பிறகு 14 நாட்களுக்கு பயணிகள் உடல்நிலையை கண்காணிக்க வேண்டும்.

இரு நாடுகளுக்கும் இடையே திட்டமிடப்பட்ட வணிக விமானங்களை மீண்டும் தொடங்க விமானப் போக்குவரத்து அதிகாரிகள் ஒப்புக்கொண்டதை அடுத்து, கடந்த நவம்பர் 29 அன்று இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்காக சிங்கப்பூர் தடுப்பூசி போடப்பட்ட பயணப் திட்டம் (VTL) தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் இந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட தொடர் சோதனையில் 63 பேர் கைது