இன உணர்வை தூண்டும் விதத்தில் தகவல்கள் அனுப்பிய கட்டுமான ஊழியருக்கு சிறை

Photo: Getty

பொதுத் தேர்தல் காலத்தில், இனக்குழுக்களிடையே தவறான எண்ணத்தை தூண்ட முயன்ற ஆடவருக்கு 2 வார சிறைத்தண்டனையும் S$7,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

இதில் 52 வயதான சிராஜுதீன் அப்துல் மஜீத் (Sirajudeen Abdul Majeed) நேற்று (பிப்ரவரி 8) குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டார்.

“சிங்கப்பூர் to மதுரை” செல்லும் பயணிகளுக்கு நற்செய்தி

வேண்டுமென்றே இன உணர்வுகளை தூண்டி காயப்படுத்துதல் குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

பகைமை ஏற்படுத்துதல் போன்ற இரண்டு குற்றச்சாட்டுகள் கவனத்தில் கொள்ளப்பட்டன.

கட்டுமானத் துறையில் பணிபுரியும் சிராஜுதீன் அப்துல் மஜித், இந்திய இனத்தைச் சேர்ந்த சிங்கப்பூரர் ஆவர்.

இவர் கடந்த ஆண்டு, மேரிமவுண்ட் தனித்தொகுதி வாக்காளர்களின் இனத்தை தவறாகக் சித்தரிக்கும் படம் ஒன்றை 3 நபர்களுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.

மக்கள் செயல் கட்சி, மலாய்ச் சமூகத்தினரை ஒதுக்கும் முயற்சியில் அதிக வெளிநாட்டவர்களை அனுமதிப்பதாகத் தோன்றும் விதத்தில் ஆடவரின் பொய்த்தகவல் அமைந்திருந்ததாக, அரசாங்கத்தின் துணை வழக்கறிஞர் கூறினார்.

மேலும் அவர் செய்திகளை “தயவுசெய்து பகிர்ந்து கொள்ளுங்கள்” என்றும் கூறியதாக கூறப்பட்டுள்ளது.

இன உணர்வுகளை தூண்டி புண்படுத்தும் இந்த செயலுக்கு, அதிகபட்சமாக 3 ஆண்டு வரை சிறைத்தண்டனை, அபராதம் விதிக்கப்பட்டிருக்கலாம்.

சென்னை-சிங்கப்பூர் இடையே நேரடி விமானத்தில் செல்ல….