கேலாங் பகுதியில் அதிரடி சோதனை: முறையான உரிமம் இல்லை, வேலைவாய்ப்பு சட்டம் மீறல்… பிடிபட்ட 43 பேர்

raid 43 people under probe

கேலாங் (Geylang) பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனை நடவடிக்கையில் 43 பேர் விசாரணை வளையத்தில் உள்ளனர்.

கடந்த மாதம் மே 21 முதல் 26 வரை நடந்த அமலாக்க நடவடிக்கையைத் தொடர்ந்து அவர்கள் சிக்கினர்.

வெளிநாட்டு ஊழியருக்கு சிறை.. பெண்ணுக்காக 3 ஊழியர்கள் இடையே பொது இடத்தில் கைகலப்பு

அவர்கள் 33 முதல் 75 வயதுக்குட்பட்ட 31 ஆண்கள் மற்றும் 12 பெண்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

சட்டவிரோத சூதாட்டம், சட்டவிரோத பாலியல் உத்வேக மருந்து விற்பனை, மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக விசாரிக்கப்படுகிறார்கள்.

இதில் 36 மற்றும் 40 வயதுடைய இருவர், வெளிநாட்டு மனிதவளச் சட்டத்தின் கீழ் விசாரணையில் உள்ளனர்.

மேலும் 36 மற்றும் 60 வயதுடைய மற்றொரு இருவர், முறையான உரிமம் இல்லாமல் மசாஜ் நிறுவனங்களை நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

பெண்கள் உரிமைகள் சட்டத்தின்கீழ் ஒன்பது பெண்கள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

பைக்கில் சூப்பர்மேன் சாகசம்… நொடியில் பிரிந்த உயிர் – மலேசிய ஆடவரின் பரிதாப செயல்