குளு குளு டிசம்பரில் அடி வைக்கும் சிங்கப்பூர்! – பருவமழையை எதிர்நோக்கும் சிங்கப்பூரர்கள்!

Pic: Roslan RAHMAN/AFP
சிங்கப்பூரில் அடுத்த பதினைந்து நாட்களுக்குள் மழை பெய்யக்கூடும் என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த சில மாதங்களுக்கு வடகிழக்கு பருவமழை நீடிக்கும் என்பதால் ஈரமான வானிலை எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக டிசம்பர் மாதம் மழைக்காலம் ஆகும்.எனவே,பெரும்பாலான நாட்களில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.மாலை வரை மழை நீடிக்கும் வாய்ப்புள்ளது.அடுத்த இரண்டு வாரங்களில் தினசரி வெப்பநிலை 24 முதல் 33 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வப்போது வெப்பநிலை அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும்.நவம்பர் மாதம் முழுவதும் சிங்கப்பூரின் பெரும்பாலான பகுதிகளில் சராசரிக்கும் குறைவான மழை பதிவானது.சிங்கப்பூரின் தெற்கில் உள்ள பகுதிகளில் சராசரி மழை பெய்தது.

நவம்பர் மாதம் தினசரி பதிவாகிய அதிகபட்ச வெப்பநிலை 35.6 டிகிரி செல்சியஸ் ஆகும்.நவம்பரில் ஜூரோங் பகுதியில் பெய்த மழை காரணமாக மாதத்தின் குறைந்தபட்ச வெப்பநிலையாக 21.8 டிகிரி செல்சியஸ் இருந்தது.சராசரியை விட குறைவான மழை சென்டோசாவில் பதிவானது.