சிங்கப்பூரில் 2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஜொலிக்க உள்ள “ரமலான் பஜார் & ஒளியூட்டு” அலங்காரங்கள்!

geylang-serai-bazaar-comeback
Lee Hsien Loong/FB

சிங்கப்பூரில் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு, இந்த ஆண்டு நோன்பு பெருநாள் கொண்டாட்டம் ரம்ஜான் கடைகளுடன் மீண்டும் தயாராக உள்ளது.

கோவிட்-19 காரணமாக பாதிக்கப்பட்ட இந்த கொண்டாட்டங்கள், விஸ்மா கெய்லாங் செராய் (Wisma Geylang Serai – WGS) மற்றும் கம்போங் கெலாம் (Kampong Gelam) ஆகிய இரண்டு இடங்களிலும் மீண்டும் வரவுள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஆழமான வடிகாலில் விழுந்த சிங்கப்பூர் பெண்ணின் AirPod: கனமழையிலும் ஓடிச்சென்று உதவிய “வெளிநாட்டு ஊழியர்”!

இதனை தேசிய வளர்ச்சி இணை அமைச்சர் பைஷல் இப்ராகிம் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்தார்.

மேலும், மேற்குறிப்பிட்ட அந்த இரண்டு இடங்களிலும் பொதுமக்கள் மகிழ்ச்சியை அனுபவிக்கும் வகையில் “நோன்பு பெருநாள் ஒளியூட்டு” அலங்காரங்கள் இருக்கும் என்பதை உறுதிப்படுத்தினார்.

இருப்பினும், இந்த ஆண்டின் நோன்பு பெருநாள் பஜார் கோவிட்-19க்கு முந்தைய நாட்களை விட மிகச் சிறிய அளவில் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

“பஜார் மதியம் 1 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கும், WGS கட்டிடத்திற்கு அருகில் இரண்டு பகுதிகளாக அது இருக்கும்.”

“ஒவ்வொரு பகுதியிலும் அதிகபட்சம் 20 ஸ்டால்கள் இருக்கும்” என்று தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியுள்ளது.

சிங்கப்பூர் சாலைகளில் மேலாடையின்றி ஓடிய ஆடவர்: வளைத்து பிடித்த போலீஸ்!