உலகின் மிக அழகான வாத்து.. சிங்கப்பூரில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த “மாண்டரின் வாத்து”

Rare mandarin duck spotted in Clementi
Photo: encrypted

கிளெமெண்டியில் அழகான இறகுகளை கொண்ட அரிய மாண்டரின் வாத்து அனைவரின் கண்களுக்கும் விருந்தாக அமைந்தது.

பிளாக் 349 கிளெமெண்டி அவென்யூ 2க்கு அருகிலுள்ள கால்வாயில் இருந்த அந்த பறவையின் புகைப்படங்கள் சனிக்கிழமை முதல் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

லிட்டில் இந்தியாவில் போலீசிடம் வம்பு, ஆயுதத் தாக்கில் பங்கு.. குற்றத்தை ஒப்புக்கொண்ட ஊழியர்

ஞாயிற்றுக்கிழமை வெளியான பதிவுகளில் பார்க்கும்போது அந்த வாத்து உலு பாண்டனில் உள்ள கால்வாயில் இருந்ததை காண முடிந்தது.

உலகின் மிக அழகான வாத்துகளில் ஒன்றாக இந்த மாண்டரின் வாத்து கருதப்படுவது தான் இதன் சிறப்பு.

“இந்த வாத்துகள் சிங்கப்பூரை பூர்வீகமாகக் கொண்டதல்ல, பொதுவாக சீனா மற்றும் ஜப்பான் போன்ற கிழக்கு ஆசிய நாடுகளில் காணப்படுகிறது.”

இந்த வாத்தின் அழகு காரணமாக பிரிட்டன் போன்ற பிற நாடுகளுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும் பறவை ஆர்வலர் ஒருவர் கூறினார்.

ஆனால் சிங்கப்பூரிலுள்ள வெப்பமான வானிலை இந்த வகை வாத்துகளுக்கு ஏற்றது அல்ல, ஏனெனில் அவை குளிர்ச்சியான மிதமான காலநிலை கொண்ட நாடுகளைச் சேர்ந்தவை.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

கால்வாயில் விழுந்த கார்… சிக்கி தவித்த இருவரை உடனடியாக குதித்து மீட்ட வெளிநாட்டு ஊழியர் – குவியும் நன்றிகள்