உலகின் அழகிய வாத்தை மதிய உணவாக சாப்பிட சீறிப்பாய்ந்த பெரிய உடும்பு: கடைசியில் ட்விஸ்ட் – வீடியோ

Rare Mandarin duck vs monitor lizard spore
Photo; Steven Neo

உலகின் மிகவும் அழகான அரியவகை மாண்டரின் வாத்து சிங்கப்பூரில் காண்போரின் கண்களுக்கு விருந்தளித்தது.

பிளாக் 349 கிளெமெண்டி மற்றும் உலு பாண்டனில் உள்ள கால்வாயில் அந்த வாத்து காணப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் 58வது தேசிய தினம்: களைகட்ட போகும் கொண்டாட்டங்கள்… 5 முக்கிய இடங்கள் – விளையாட்டும் உண்டு

உலு பாண்டன் கால்வாயில் வாத்துடன் சேர்ந்து பெரிய உடும்பும் இருந்ததாக புகைப்பட கலைஞர் ஒருவர் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

உடும்பின் மதிய உணவு நேரம் என்பதால், அது அரியவகை வாத்தை உணவாக உண்ண முடிவு செய்துள்ளது.

தண்ணீரில் ஹாயாக ரெஸ்ட் எடுத்து கொண்டிருந்த வாத்து மீது சட்டென்று சீறிப்பாய்ந்த உடும்பு கிட்டத்தட்ட பிடித்தது என்றே சொல்லலாம்.

Photo courtesy of Steven Neo

சுதாரித்து கொண்ட வாத்து, தன்னுடைய அழகிய இறைக்கைகளால் பறந்து தன் உயிரை காப்பாற்றிக்கொண்டது.

பின்னர் தரைக்கு வந்த வாத்தை விடாமல் சீரிய பாய்ந்த உடும்புக்கு ஏமாற்றம் மட்டுமே கிடைத்தது. ஏனெனில் மாண்டரின் வாத்து அங்கிருந்து மின்னல் வேகத்தில் பறந்து சென்றது.

இந்த அழகிய காட்சிகளை Neo என்பவர் காணொளியாக எடுத்து பதிவேற்றம் செய்துள்ளார்.

உலகின் மிக அழகான வாத்து.. சிங்கப்பூரில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த “மாண்டரின் வாத்து”

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

லிட்டில் இந்தியாவில் போலீசிடம் வம்பு, ஆயுதத் தாக்கில் பங்கு.. குற்றத்தை ஒப்புக்கொண்ட ஊழியர்