‘வீதி உலா நீ வந்தால் தெருவிளக்கும் கண்ணடிக்கும்’ – சிங்கப்பூரில் ஒளிரும் நிலவொளியில் உலா வந்த சாம்பார் மானைப் படம்பிடித்த கலைஞர்

rare sambar deer capture in singapore streetlight
சிங்கப்பூரின் தெருவிளக்கு வெளிச்சத்தில் நின்று கொண்டிருந்த சாம்பார் மானை ஒரு அதிர்ஷ்டசாலி புகைப்படக் கலைஞர் அற்புதமாக படம்பிடித்துள்ளார்.
ஆகஸ்ட் 19 அன்று சிங்கப்பூர் வனவிலங்கு சைட்டிங்ஸ் என்ற Facebook குழுவில் பதிவேற்றப்பட்ட 19 வினாடிகள் கொண்ட கிளிப்பில், கம்பீரமான அந்த மான் இரண்டு முறை புகைப்படக் கலைஞரின் திசையில் உலா வருவதைக் காண முடிகிறது.புகைப்படக் கலைஞர் டான் யோங் லின், மானை தனது கேமராவில் படம் பிடித்தபோது மூச்சு விடாமல் அமைதி காத்து நின்றதாகக் கூறினார்.

மரத்திற்கு பின் நின்று கொண்டிருந்தபோது, அவரது உடல் முழுவதும் எறும்பு கடித்தது.ஆனாலும் அவர் மானைப் படம்பிடிப்பதற்காக பொறுமையுடன் இருந்தார்.
டான் இறுதியில் ஃபிளாஷ் பயன்படுத்தாமல் மானின் புகைப்படங்களையும் வீடியோவையும் எடுக்க முடிந்தது.மிளிரும் நிலவொளியிலும் ஒளிரும் தெரு விளக்கிலும் மானை அழகாகப் படம்பிடிக்க முடிந்தது.

சிங்கப்பூரில் சாம்பார் மானை காண்பது அரிது.
2017 ஆம் ஆண்டின் ஒரு மதிப்பீட்டின்படி, தீவில் 20 சாம்பார் மான்கள் மட்டுமே இருப்பதாக அறியப்பட்ட நிலையில் டான் அதிர்ஷ்டசாலி ஆவார்.பல சந்தர்ப்பங்களில் மாந்தை வீதி பகுதியில் இந்த மான்கள் காணப்படுவதாக ஒருவர் சுட்டிக்காட்டினார்.