Ratatouille படத்தின் Remy எலியை நினைவூட்டியதாக சூப்பர் மார்க்கெட்டில் சோளம் சாப்பிட்ட எலி பற்றி நெட்டிசன்கள் புகழாரம் !

rat giant supermarket

நீங்கள் எப்போதாவது பற்களின் அடையாளங்களுடன் பொருட்களையோ அல்லது காய்கறிகளையோ வாங்கினால், அதற்குக் காரணம் உங்களுக்கு முன்பாகவே வேறு யாருக்கோ அது முதலில் கிடைத்திருக்க வேண்டும். அது போல ஜூலை 18 அன்று எலி ஒன்று சோளத்தை உண்ணும் வீடியோ ஆன்லைனில் பகிரப்பட்டது. பிளாக் 683 ஹூகாங் அவென்யூ 8 இல் உள்ள ஜியன்ட் சூப்பர் மார்க்கெட்டில் விற்பனைக்கு  வைக்கப்பட்டிருந்த சோளத்தை வாடிக்கையாளர்கள் வாங்கும் முன்பே சாப்பிட்டு தன் வயிற்றை  நிரப்பியது அங்கிருந்த ஒரு எலி.

அந்த எலியின் முகம் அன்றைய உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்து, தான் மீண்டும்  குப்பைகளை உண்ணப்போவதில்லை என்பதைப் போல, கெத்தாக அமர்ந்து, மேலே பார்த்தபடி அந்த வீடியோவில் இருந்தது.

 

வீடியோவிற்கு வந்த கருத்துகளில் யாரும் வன்மத்தை வெளிப்படுத்தவில்லை, ஏனெனில் கருத்துக்களை பதிவிட்டவர்கள் நிறைய பேர், அந்த எலி அனிமேஷன் படமான Ratatouille இன் Remy எலியை அவர்களுக்கு நினைவூட்டியதாக கூறியுள்ளனர். எனவே எல்லா எலிகளும் இந்த எலியைப் போல இவ்வளவு அதிர்ஷ்டசாலிகள் இல்லை.

 

முன்னதாக, மே மாதம், ஜியண்ட்ஸ் IMM கடையில் வாங்கப்பட்ட காய்கறி பாக்கெட்டில் ஒரு எலி இறந்து கிடந்தது குறிப்பிடத்தக்கது.