நிலைத்தவறி கடுமையாக தரை இறங்கிய வான்குடை சாகச வீரரின் நிலை என்ன?

red-lion-stable-condition
NDPeeps' YouTube livestream

தேசிய தின கொண்டாட்டதின் போது சிவப்பு சிங்க வான்குடை சாகச வீரர் நிலைத்தவறி கடுமையாக தரை இறங்குவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

தடுமாறிய அந்த 3WO என்னும் 3ஆம் வாரண்ட் அதிகாரியான ஜெஃப்ரி ஹெங்கின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் சுயநினைவுடன், மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக அவர் கூறியது நம் அனைவருக்கும் ஆறுதலாக அமைந்துள்ளது.

இந்த சம்பவத்தின் காட்சிகள் சமூக வலைத்தளங்களின் வழியே தீயாக பரவியது குறிப்பிடத்தக்கது.