சீறிப்பாயும் சிங்கப்பூரின் சிவப்பு சிங்கங்கள் (Red Lions) – கோலாகலமாக கொண்டாடப்படும் சிங்கப்பூரின் தேசிய தின அணிவகுப்பு

red lions jump bishon ndp singapore
சிங்கப்பூரின் தேசிய தின அணிவகுப்பு (NDP) கோலாகலமாக தொடங்கியுள்ள நிலையில் நிகழ்ச்சியின் சிறப்பம்சங்களில் ஒன்று சிவப்பு சிங்கங்கள் (Red Lions) அணிவகுப்பின் போது பாராசூட் மூலம் ஃப்ரீ-ஃபால் ஜம்ப்களை ( Freefall Jump) நிகழ்த்திக் காட்டும்.
இதைத் தவிர SAF பாராசூட் குழு ஆகஸ்ட் 7 ஆம் தேதி இரண்டு ஹார்ட்லேண்ட் இடங்களில் ஃப்ரீ-ஃபால் ஜம்ப்களையும் செய்யும்.ஹார்ட்லேண்ட்ஸில் டிக்கெட் இல்லாமல் இலவசமாக ஃப்ரீ-ஃபால் ஜம்ப்களைக் கண்டுகளிக்கலாம்.

மொத்தம் 14 சிவப்பு சிங்கங்கள் பாராசூட்டில் சிங்கப்பூரின் தேசியக் கொடியைப் பிடித்தவாறு மேலிருந்து குதிக்க உள்ளது.பிஷானில் ஏழு ஜம்பர்கள் மற்றும் கிம் மோவில் ஏழு ஜம்பர்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளது.காலை 8:40 மணி முதல் எம்சீஸ்(Emcees) தளத்தில் இருப்பார்கள்.

பிஷானுக்குள் பாரசூட் அணிந்த ரெட் லையன்ஸ் காலை 9 மணிக்கு சிங்கப்பூரின் தேசியக்கொடியை பறக்கவிட்டவாறு தாவத் தொடங்கும்.பிரத்தியேகமான தேசியதின அணிவகுப்பின் நினைவுச்சின்னங்களை வெல்வதற்கான வாய்ப்பைப் பார்வையாளர்கள் பெறலாம்.

சிங்கப்பூரின் தேசியதின அணிவகுப்பை நேரடியாகவும் ஆன்லைனிலும் கண்டு ரசிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.ஆரவாரமாக அணிவகுப்பு தினம் துவங்கியிருப்பதை சிங்கப்பூரர்கள் உணர முடியும்.