சிங்கப்பூரில் பாரம்பரியமாக ஆண் ஊழியர்கள் ஆதிக்கம் செலுத்தும் துறையில், அதிகப் பெண்களை ஈர்க்க திட்டம்!

singapore jobs
(Photo: Economic Times)

சிங்கப்பூரில் பாரம்பரியமாக ஆண் ஆதிக்கம் செலுத்தும் தளவாடத் துறையில் அதிகப் பெண்களை ஈர்க்கும் நோக்கில் வேலைகள் மறு வடிவம் பெற உள்ளன.

பெண்களின் தேவைகளுக்கு ஏற்ப வேலைகள் மற்றும் வேலை ஏற்பாடுகள் மறுவடிவம் பெற வேண்டும் என்று தொழில்துறையினர் கூறுகின்றனர்.

சிங்கப்பூரில் வசிக்கும் 6 பேரில் ஒருவர் இந்த அபாயத்தில் உள்ளார்… TikTok, Instagram போன்ற சமூக ஊடங்களால் பாதிப்பு!

தளவாடங்கள் மற்றும் விநியோகச் சங்கிலித் துறையில் உள்ள 10 நிறுவனங்கள், தொழிலாளர் இயக்கமான NTUC உடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் (MOUs) கையெழுத்திட்டன.

அந்த 10 நிறுவனங்களில் சுமார் 650 க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிகின்றனர், அந்நிறுவனங்கள் முற்போக்கான பணியிட கொள்கைகளை செயல்படுத்த உறுதியளித்தன.

SCDF ஆம்புலன்ஸ், 2 கார்கள் விபத்து: 11 மாதக் குழந்தை மருத்துவமனையில் அனுமதி