COVID-19 விதிகளை மீறி நடந்ததாக காட்டும் இறுதி ஊர்வல காணொளி: நெட்டிசன்கள் காட்டம்

Mothership

ரெட்ஹில் க்ளோஸில் நவம்பர் 21 அன்று நடந்த இறுதி ஊர்வலம் அருகிலுள்ள கட்டிடத்தில் இருந்து ஐந்து நிமிடங்களுக்கு மேல் படமாக்கப்பட்டுள்ளது.

இந்தக் காட்சிகள் பின்னர் பல்வேறு சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டன.

VTL பயணம்: விமான கட்டணத்தை விட COVID-19 சோதனைகளுக்கான செலவு அதிகம்

பங்கேற்பாளர்களில் பெரும் குழு கோவிட்-19 விதிமுறைகளை மீறியதாகவும், அவர்களில் சிலர் முகக்கவசம் அணியவில்லை என்றும் கூறப்படுகிறது.

இறந்தவரின் உடல் சவப்பெட்டிக்குக் கொண்டுவரப்பட்ட இடத்தில் குறைந்தது நூறு பேராவது இருப்பார்கள் என காணொளி விளக்குகிறது.

கோவிட்-19 விதிமுறைகளை மீறுபவர்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பரப்புவது கடந்த ஆண்டு முதல் பொதுவாக நடந்து வருகிறது.

ஆனால், இந்த குறிப்பிட்ட காணொளி நெட்டிசன்களிடமிருந்து விமர்சனத்தை பெற்றது, அந்த நிகழ்வின் சூழலைக் கருத்தில் கொண்டு பகிரவேண்டும் என பலர் கூறினர்.

சிலர் இதுபோன்ற காணொளிகளை வெளியிடுவதை தவிர்ப்பது மிகவும் மரியாதைக்குரியதாக இருந்திருக்கும் என்றும் கூறினர்.

கடந்த காலங்களில் பெரிய அளவில் மக்கள் கூடும் இது போன்ற சம்பவங்கள் அல்லது இறுதி ஊர்வலங்கள் தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முடங்கிய VTL பயண அனுமதி விண்ணப்பத்திற்கான இணையதளம் – மன்னிப்பு கேட்டது ICA