சிங்கப்பூரில் முகக்கவசம் அணிய மறுத்து கடைக்காரர் மேல் ஸ்ட்ராவ் வீசிய ஆடவர் கைது..!

(PHOTO: Shin Min Daily News)

முகக்கவசம் அணியுமாறு கூறப்பட்டதைத் தொடர்ந்து தகாத வார்த்தைகளையும், பரப்பரப்பையும் ஏற்படுத்திய 62 வயதான ஆடவர் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி காலை 10 மணியளவில் பிளாக் 673B சோவா சூ காங் கிரேஸண்ட்டில் நடந்தது என்று ஷின் மின் டெய்லி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சிங்கப்பூரில் அனுமதியில்லாமல் பொதுக்கூட்டம் ஏற்பாடு – ஆடவர் மீது குற்றம் நிரூபணம்…!

முகக்கவசம் அணிய மறுப்பு

ஆடவர், காபி ஷாப் ஒன்றில் முகக்கவசம் அணியாமல் பானம் வாங்க முயன்றதைக் கண்ட ஸ்டால் உதவியாளர், அவரை முகக்கவசம் அணியும்படி கூறினார்.

ஆனால், அவர் முகக்கவசம் அணிய மறுத்து, உதவியாளரிடம் சத்தமாக பேசி, அவரின் மேல் ஸ்ட்ராவை வீசினார்.

58 வயதான ஸ்டால் உதவியாளர், மற்றவர்களின் நலனுக்காக முகக்கவசம் அணியுமாறு அந்த ஆடவரிடம் கூறியதாக ஷின் மின் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் 10 நுழைவுவாயில்களில் உயரும் ERP சாலைக் கட்டணம்..!

காவல்துறை வருகை

அதை தொடர்ந்து, இது பற்றி காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த ஆடவரை முகக்கவசம் அணிய வேண்டி கேட்டுக்கொண்டனர்.

ஆனால் அவர் அதை மறுத்ததாகவும், அவர்களுக்கு இடையேயான இந்த போராட்டம் ஒரு மணி நேரம் நீடித்ததாகவும் கூறப்படுகிறது.

அதனை அடுத்து, காவல்துறையினர் அந்த நபரை காவல் ரோந்து காரில் அழைத்துச் சென்றனர், ஆனால் அவர் பிடிவாதம் பிடித்ததாக கூறப்பட்டுள்ளது.

சென்னை, திருச்சியிலிருந்து சிங்கப்பூர் பறக்க… முன்பதிவு தொடக்கம்

10 தடவைகளுக்கு மேல்..

இந்த சம்பவத்திற்கு முன்னர், அந்த ஆடவர் ஏற்கனவே 10 தடவைகளுக்கு மேல் மற்றவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

ஒவ்வொரு முறையும் முகக்கவசம் அணியும்படி கூறும்போது, ​​அவர் இதுபோன்று பரப்பரப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

கைது

பொது இடத்தில் தொந்தரவு மற்றும் பொது அதிகாரிகளுக்கு காயங்கள் ஏற்படுத்தியதாக அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த வழக்கை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தஞ்சோங் பகார் விபத்து: கடந்த 10 ஆண்டு போக்குவரத்து விபத்துகளில் இதில் அதிக உயிரிழப்பு…