சமூகம் 90’s கிட்ஸ் போல! – ரிமோட் கார் மூலம் மளிகைப் பொருட்களை எப்படி வாங்கியிருப்பார் இந்த சிங்கப்பூர் நபர் ?

remote-controlled-car-buy-food-groceries
சிங்கப்பூரின் HDB குடியிருப்பில் வசிக்கும் ஸ்டீவ் ஹோ என்ற நபர்,அவருக்குத் தேவையான உணவு மற்றும் மளிகைப் பொருட்களை வாங்க ரிமோட் கண்ட்ரோல் காரைப் பயன்படுத்தும் இரண்டு வீடியோக்களை இதுவரை வெளியிட்டுள்ளார்.ரிமோட் காரில் பொருத்தப்பட்ட கேமரா மூலம் பொருட்களை தேர்வு செய்து வாங்குகிறார்.
ஜூலை 15 அன்று அவர் வெளியிட்ட முதல் வீடியோவில்,ரிமோட் கண்ட்ரோல் கார் பக்கத்தில் உள்ள ஜெயண்ட் சூப்பர் மார்க்கெட்டுக்கு மளிகை பொருள் வாங்க ஒரு கூடையை இழுத்துக்கொண்டு புறப்பட்டது.
மளிகை அங்காடியை அடைந்ததும், ஊழியர்கள் முதலில் ரிமோட் காரைப் புறக்கணித்தனர்.ஆனால் ஊழியர்களின் கவனத்திற்கு காரிலிருந்து அழைப்பு வந்தது.ஸ்பீக்கரில் அவரது குரல் தெளிவாகக் கேக்கவில்லை.ரோபோவுக்காக பணிபுரிய வேண்டும் என்று ஊழியர்கள் சிறிது கோபமடைந்தனர்.

பொருட்களை கூடைக்குள் ஏற்றியவுடன்,கூடைக்குள் கிடந்த S$10 நோட்டை எடுத்து, மீதி சில்லறையை ஊழியர்கள் கூடைக்குள் வைத்தனர்.ரிமோட் கார் பின்னர் அந்த நபரின் குடியிருப்புக்குத் திரும்பியது.
ரிமோட் கார் ஒரு நபர் உடல் ரீதியாக கடைக்குச் சென்று வீட்டிற்குத் திரும்ப வேண்டிய செயல்முறையை மிச்சப்படுதினாலும் தானியக்கமாக இல்லாததால், இந்த செயல்முறை மனிதனின் செயல் மற்றும் கவனத்தை மிகவும் சார்ந்துள்ளது, குறிப்பாக சாலையைக் கடக்கும் போது.