கடையின் மேற்பரப்பு பலகை வழியாக விழுந்து உரிமையாளர் மரணம் – இந்த ஆண்டில் 20ஐ தொட்டது வேலையிட உயிரிழப்புகள்

PHOTO: WORKPLACE SAFETY AND HEALTH COUNCIL

கெயிலாங்கில் உள்ள தன் கடையின் உச்சவரம்பு பலகை வழியாக விழுந்ததில் புனரமைப்பு நிறுவனத்தின் உரிமையாளர் கடந்த மே 2 அன்று உயிரிழந்தார்.

இந்த விபத்து 511 கெயிலாங் சாலையில் மாலை 6.45 மணியளவில் நடந்ததாக மனிதவள அமைச்சகம் கூறியுள்ளது.

சிங்கப்பூரில் மேலும் ஒரு கொடூர வேலையிட விபத்து.. இந்திய ஊழியர் பரிதாபமாக உயிரிழப்பு

அதே போல, தானா மேரா கடற்கரை சாலையில் அமைந்துள்ள வேலையிடத்தில் ஏப்ரல் 22 அன்று Wheel loader வாகனம் தாக்கியதில், 32 வயதான இந்திய நாட்டவர் கடந்த வியாழன் அன்று மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இவை இரண்டும் இந்த ஆண்டு நடந்த சமீபத்திய வேலையிட தொடர்பான உயிரிழப்புகள் ஆகும்.

இதன் மூலம் இந்த ஆண்டில் ஏற்பட்ட வேலையிட தொடர்பான மொத்த இறப்புகளின் எண்ணிக்கையை 20 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 2016 க்குப் பிறகு இதே காலகட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் தற்போது பதிவாகியுள்ளதாக MOM கூறியுள்ளது.

பிரதமர் லீ சியென் லூங் திங்களன்று ஒரு முகநூல் பதிவில், இறப்பு எண்ணிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், இதற்கு சரியாக நடவடிக்கை வேண்டும் என்றும் குறிப்பிட்டார். தற்போது பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

ஆலையில் தீ: பெரிய இயந்திரத்தை ஊழியர்கள் பயன்படுத்தியபோது தீ பற்றி விபத்து