வாடகை கொடுக்க முடியல!சொந்தநாட்டுக்கே போறோம்! – சிங்கப்பூரில் சிரமப்படும் வெளிநாட்டு மாணவர்கள்

(photo: mothership)

கல்வி,மருத்துவம்,வேலை மற்றும் தொழில் போன்ற பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூரை நோக்கி மக்கள் வருகின்றனர்.பன்னாட்டு மக்கள் வசிக்கும் சிங்கப்பூரில் இடப்பற்றாக்குறை அதிகரித்து வருகிறது.

சிங்கப்பூரில் தங்கி பட்டப்படிப்பினை கற்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு தங்குமிடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.அதிலும் மாணவர் பரிமாற்றத் திட்டத்தின்கீழ் சிங்கப்பூருக்கு வரும் மாணவர்கள் இந்தச் சிரமத்திற்கு ஆளாவதாகக் கூறப்படுகிறது.

எடுத்துக்காட்டாக,NUS பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதியில் இடப்பற்றாக்குறையால் வேறு இடங்களில் தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.மேலும்,தங்குமிடத்திற்கான வாடகைத் தொகை மிகவும் அதிகமாக இருப்பதாகவும் மாணவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மாணவர் விடுதியில் வாடகைத் தொகை அதிகபட்சமாக $850 வரை மட்டுமே இருக்கும்.ஆனால்,வெளியே தங்குமிடங்களில் $1,100 வரை வாடகை வசூலிக்கப்படுகிறது.

இதனால் சிரமப்படும் வெளிநாட்டு மாணவர்கள் சிலர் குறிப்பிடப்பட்ட காலகட்டத்திற்கு முன்பாகவே சொந்தநாடு திரும்புவதாகக் கூறுகின்றனர்.