வெளிநாட்டு ஊழியர்கள் எதிர்கொள்ளும் சவால்! – சிங்கப்பூரில் கிடுகிடுவென ஏற்றம் காணும் வீட்டு வாடகை!

rental house flats apartment

சிங்கப்பூரில் குடியிருப்புப் பற்றாக்குறை அதிகரித்து வருவதால் வாடகை உயர்ந்து கொண்டே இருக்கிறது.கடந்த நவம்பர் மாதத்தில் தனியார் அடுக்குமாடி,வீவக வீடுகளின் வாடகை கணிசமான ஏற்றத்தைக் கண்டது.

கடந்த அக்டோபர் மாதம் 1.8 சதவீதம் வாடகை ஏற்றம் கண்டதைத் தொடர்ந்து வீட்டு வாடகை உயர்ந்து வருகிறது.இது அனைத்து வகையான வீடுகளுக்கும் பொருந்தும் என்று SRX,99.co என்ற சொத்து நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக தனியார் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் விலை நவம்பர் மாதம் 2 சதவீதம் அதிகரித்தது.புறநகர்ப் பகுதியில் உள்ள வீடுகளின் விலைகள் 3.4 சதவீதம் உயர்ந்துள்ளது.

பொதுவாக வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூரில் வசிக்கும் வெளிநாட்டினரே இத்தகைய வாடகை பிரச்சினைகளை எதிர்கொள்வர்.ஆனால்,தற்போது உள்ளூர்வாசிகளுக்கான வீட்டுத் தேவையும் அதிகரித்துள்ளது.கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தனியார் அடுக்குமாடி வீடுகளின் வாடகை 34 சதவீதம் அதிகரித்துள்ளது.