“வாடகைக்கு இடம் ஏற்பாடு பண்ணி தர்றோம்” – வெளிநாட்டவர்கள் பலரை ஏமாற்றிய போலி ஏஜெண்டுகள்: உஷார்

rental-scams-spore

சிங்கப்பூரில் வாடகை மோசடியில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் சுமார் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் சுமார் S$1.3 மில்லியன் மோசடி நடந்துள்ளதாகவும், அவர்களில் 9 ஆண்கள், 3 பெண்கள் அடங்குவர் என்றும் கூறப்பட்டுள்ளது.

அவர்களுக்கு வயது 18 முதல் 56 க்கு உட்பட்டு இருக்கும் என்றும் போலீசார் நேற்றைய அறிவிப்பில் கூறினர்.

வாடகைக்கு வீடு அல்லது இடம் தேடுவோரிடம் ஏஜெண்டுகள் போல லாவகமாக பேசி அவர்களிடம் வாடகையை முன்பணமாக பெற்று ஏமாற்றுவதே இவர்களின் வேலை.

அவர்கள் வாடகை இடத்தை காட்டாமலேயே பணத்தை கேட்டு ஏமாற்றுவர் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

மொத்தம் 480 மோசடி சம்பவங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.