சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகத்தில் கோலாகலமாக நடைபெற்ற குடியரசுத் தின விழா!

Photo: High Commission of India in Singapore

இந்தியாவின் 74- வது குடியரசுத் தினம் இந்தியா மட்டுமின்றி, பல்வேறு நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் சார்பில் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

காய்கறிகளால் மிகப்பெரிய ரங்கோலியைச் செய்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்!

அந்த வகையில், இந்தியாவின் 74- வது குடியரசுத் தினத்தையொட்டி, சிங்கப்பூரில் உள்ள கிரேஞ்ச் சாலையில் (31 Grange Road) அமைந்துள்ள இந்திய தூதரகத்தில் (High Commission of India in Singapore), ஜனவரி 26- ஆம் தேதி அன்று காலை 09.00 மணிக்கு நடைபெற்ற விழாவில், இந்தியாவின் தேசிய கொடியை சிங்கப்பூருக்கான இந்திய தூதர் குமரன் பெரியசாமி ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.

அதைத் தொடர்ந்து, பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர், வெள்ளை, பச்சை, ஆரஞ்சு நிறங்களில் இருந்த பலூன்கள் பறக்கவிடப்பட்டன. கலை நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்ட மாணவ, மாணவிகள் அனைவருக்கும் இந்திய தூதர் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார்.

ஜன.28- ஆம் தேதி அன்று ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் ரத சப்தமி!

விழாவில், சிங்கப்பூர் வாழ் இந்தியர்கள் இந்திய தேசியக் கொடியை அணிந்தவாறும், தேசிய கொடியை கையில் ஏந்தியும் தங்கள் குடும்பத்துடன் கலந்துக் கொண்டனர். அதேபோல், இந்திய தூதரக அதிகாரிகள் உட்பட சுமார் 100- க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.