சென்னையில் நடந்த குடியரசுத் தின விழாவில் சிங்கப்பூர் துணைத் தூதர் பங்கேற்பு!

Photo: Singapore in India Official Twitter Page

ஜனவரி 26- ஆம் தேதி அன்று சென்னை, காமராசர் சாலையில் நடைபெற்ற குடியரசுத் தின விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதைச் செலுத்தினார்.

அதைத் தொடர்ந்து, பள்ளி மற்றும் கல்லூரி மாணவியர்களின் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளையும், பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் திட்டங்களை விளக்கி அணி வகுத்து வந்த அலங்கார ஊர்திகளின் அணி வகுப்பினைப் பார்வையிட்டார்கள். அதேபோல், தஞ்சாவூர்- தென்னக பண்பாட்டு மையம் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளைப் பார்வையிட்டார்கள்.

காய்கறிகளால் மிகப்பெரிய ரங்கோலியைச் செய்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்!

இந்த விழாவில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) டி.ராஜா, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, சட்டப்பேரவை துணைத் தலைவர் பிச்சாண்டி, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., தமிழ்நாடு காவல்துறைத் தலைவர், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், முப்படையைச் சேர்ந்த அதிகாரிகள், வெளிநாடுகளின் தூதர்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

அந்த வகையில், சென்னையில் உள்ள சிங்கப்பூர் துணைத் தூதரகத்தின் தூதர் பாங் ஸே சியாங் எட்கர், சென்னையில் நடைபெற்ற குடியரசுத் தின விழாவில் கலந்துக் கொண்டார். பின்னர், அணி வகுப்பையும், அலங்கார ஊர்திகளையும் கண்டுக் களித்தனர்.

சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகத்தில் கோலாகலமாக நடைபெற்ற குடியரசுத் தின விழா!

இதனிடையே, இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதரகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “ஒவ்வொரு இந்தியருக்கும் இனிய குடியரசுத் தின வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளது.