மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துங்க.. ஊக்கத் தொகை பெறுங்க – சிங்கப்பூர் அதிரடி அறிவிப்பு

Electricity tariff increase
Photo: Google Maps

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தும் வீடுகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வீடுகளில் வசிப்பவர்கள் உச்ச தேவைக் காலங்களில் தங்கள் மின்சார பயன்பாட்டை சரிசெய்ய ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு இடைவேளை, ஓய்வு உள்ளிட்டவை கட்டாயம் – அக். 24 முதல் புதிய விதிகள் அறிமுகம்

ரெசிடென்ஷியல் டிமாண்ட் ரெஸ்பான்ஸ் (R-DR) என்று அழைக்கப்படும் இந்த புதிய முயற்சி அடுத்த 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் நடப்புக்கு வரலாம் என சொல்லப்பட்டுள்ளது.

மின்சாரம் உச்சம் அடையும் போது, மின்சார பயன்பாட்டை தற்காலிகமாக குறைத்துக்கொள்ள SP செயலியில் இருந்து தகவல் கொடுக்கப்படும்.

செப்டம்பர் நிலவரப்படி, குடியிருப்பு மற்றும் குடியிருப்பு அல்லாத பகுதிகளில் சுமார் 834,000 ஸ்மார்ட் மின்சார மீட்டர்கள் நிறுவப்பட்டுள்ளதாக SP குழுமம் கூறியுள்ளது.

அத்தகைய மீட்டர்களைக் கொண்ட குடும்பங்கள் தங்கள் மின்சார பயன்பாட்டைக் கண்காணிக்க SP செயலியை பயன்படுத்தலாம்.

இந்நிலையில், மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தும் வீடுகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச்சென்ற லாரியின் மேலே கட்டப்பட்ட மரப்பலகை.. காற்றில் பறந்து கார் சேதம் (வீடியோ)