சிங்கப்பூர், இந்தியா இடையே விமான சேவை- இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், சிங்கப்பூர் அமைச்சருடன் சந்திப்பு!

Photo: Minister S.Iswaran Official Facebook Page

சிங்கப்பூர் அரசு கொரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டவர்களுக்கான சிறப்பு பயணத் திட்டத்தை மேலும் சில நாடுகளுக்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பின்லாந்து, இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, சுவீடன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் சிங்கப்பூர் வருபவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள தேவையில்லை. இதனால் வெளிநாட்டு பயணிகள் சிங்கப்பூருக்கு வருவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றன.

சிங்கப்பூரில் மேலும் 3,474 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று!

குறிப்பாக, சிங்கப்பூர், இந்தியா இடையேயான விமான சேவை இரு மார்க்கத்திலும் நவம்பர் 29- ஆம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில், இந்தியாவுக்கு அதிகளவில் விமான சேவையை வழங்க சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேபோல், சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கும், இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கும் செல்ல பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றன.

எந்தவொரு விமான நிறுவனமும் பயண அட்டவணையை வெளியிடாத நிலையில், டிராவல் ஏஜென்சி அலுவலகங்களுக்கு சென்று இந்தியா, சிங்கப்பூர் பயணம் தொடர்பான விவரங்களை சேகரிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சிங்கப்பூர் to இந்தியா விமானங்களுக்கு அதிகரிக்கும் தேவை – டிராவல் ஏஜென்சிகளில் அலைமோதும் கூட்டம்

இந்நிலையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சிங்கப்பூர் வந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர், நேற்று (17/11/2021) சிங்கப்பூர் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரனை சந்தித்தார்.

இச்சந்திப்பு குறித்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “ப்ளூம்பெர்க் புதிய பொருளாதார மன்றத்திற்காக சிங்கப்பூர் வந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன் இன்று காலை மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி. சிங்கப்பூருக்கும், இந்தியாவுக்கும் இடையிலான நீண்டகால கூட்டாண்மையை நாங்கள் உறுதிப்படுத்தினோம், மேலும் எங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான விமானப் பயணத்தை மீண்டும் தொடங்குவது குறித்த விவாதங்களில் நல்ல முன்னேற்றத்தை குறிப்பிட்டோம்.” இவ்வாறு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் முக்கிய நகரமான சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு தினசரி இரு விமானங்கள்…

இரு நாட்டு அமைச்சர்களின் சந்திப்பின் மூலம் இந்தியா, சிங்கப்பூர் விமான சேவை தொடர்பான பயண அட்டவணை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.