சிங்கப்பூரில் சிக்கிய காண்டாமிருகங்களின் கொம்புகள் ! – கடத்திய நபரை மடக்கிப் பிடித்த அதிகாரிகள்;வெளியான அதிர்ச்சித் தகவல்!

rhino-horn
சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில் அக்டோபர் 4 ஆம் தேதி இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய காண்டாமிருகக் கொம்புகள் கைப்பற்றப்பட்டது.தேசிய பூங்கா வாரியம் (NParks) இன் K9 பிரிவு இரண்டு சரக்குப் பைகளை கண்டுபிடித்து சோதனை செய்த போது காண்டாமிருக கொம்புகளின் 20 துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
அவை 34 கிலோ எடையும், சுமார் S$1,200,000 மதிப்பும் இருக்கும் என்று கூறப்படுகிறது.கொம்புகளை வைத்திருந்த பையின் உரிமையாளர் தென்னாப்பிரிக்காவிலிருந்து சிங்கப்பூர் வழியாக லாவோ பீப்பிள் டெமோக்ரடிக் ரிபப்ளிக் நாட்டிற்குச் சென்று கொண்டிருந்தார்.
கடத்தப்பட்ட கொம்புகள் கண்டுபிடிக்கப்பட்ட உடனே கைது செய்யப்பட்டார். காண்டாமிருகத்தின் கொம்புகளை NParks கைப்பற்றியது. அழிந்துவரும் காட்டு விலங்குகள் மற்றும் தாவரங்களின் (CITES) சர்வதேச வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் காண்டாமிருகங்களின் இனங்களும் பாதுகாக்கப்படுகின்றன.காண்டாமிருகக் கொம்புகளின் சர்வதேச வர்த்தகம் தடைசெய்யப்பட்டுள்ளது.

வனப்பகுதிகளில் 5 காண்டாமிருகங்கள் உள்ள நிலையில் அவற்றில் 3 இனங்கள் அபாயமான நிலையில் உள்ளன.தற்போது காண்டாமிருகத்தின் இனத்தைக் கண்டுபிடிக்க மரபணு சோதனை நடத்தப்படுகிறது.
சிங்கப்பூரில் இது போன்ற சட்டவிரோத செயல்பாடுகளுக்கு S$50,000 வரை அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
இது போன்ற பொருட்களை வாங்கும் நுகர்வோர் அந்த பொருள் அழிந்து வரும் உயிரினங்களின் பாகங்கள் இல்லை என்பதை உறுதி செய்து வாங்குவதன் மூலம் பொதுமக்கள் அவர்களது பங்கை ஆற்றலாம்.
சட்டவிரோதமாக வனவிலங்கு வர்த்தகம் ஏதேனும் நடந்தால் பொதுமக்கள் NParks ஐ cites@nparks.gov.sg என்ற முகவரியில் புகார்களைதெரிவிக்கலாம்.தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று உறுதியளித்துள்ளது.