ஒரு கோழிக்கறி சாதத்துக்கு இவ்வளவு பணமா, அதிர்ச்சியில் உறைந்த பெண் !

little india rice expensive

தன் வயிற்றை நிரப்ப சிக்கனமான உணவைத் தேடிக்கொண்டிருந்த சிங்கப்பூர் பெண்ணுக்கு, பச்சை இலைக் காய்கறி, கோழிக்கறி மற்றும் சாதத்திற்கு S$15 கட்டணம் வசூலிக்கப்பட்டது. இச்சம்பவம் லிட்டில் இந்தியா உணவகத்தில் அரங்கேறியுள்ளது.

விலையுயர்ந்த அந்த உணவின் புகைப்படம் மற்றும் சீன மொழியில் எழுதப்பட்ட புகாரை அந்த பெண் ஜூலை 2 அன்று பேஸ்புக்கில் பகிர்ந்தார்.

அவரது கூற்றுப்படி, அந்த நேரத்தில் வேறு வழியில்லாததால் அவர் அந்த  24 மணிநேர உணவகத்திற்கு சென்றுள்ளார். ஏற்கனவே திட்டமிட்ட பட்ஜெட்டைத் தாண்டி S$15 பில் வந்தபோது அதிர்ச்சியடைந்தார். மேலும் அந்த முகநூல் பதிவில் அவர் எந்த கிளை உணவகம் என்றும் குறிப்பிடவில்லை. மேலும் அந்த உணவகத்திற்கு தான் சென்ற முதல் மற்றும் கடைசி முறையாக இது இருக்கும் என்றும் அந்த பெண் தனது புகாரில் கூறியுள்ளார்.

மேலும் அந்த பெண் அந்த முகநூல் பதிவின் கீழ், தன் முகநூல் நண்பர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து கொண்டிருந்தார். அதில் ஒரு கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக, உணவு சுவையாக இருந்தது ஆனால் அந்த உணவு இவ்வளவு விலைக்கு மதிப்புள்ள உணவு தானா என்று கேட்டுள்ளார். மேலும் அவரின் முகநூல் நண்பர் ஒருவர் கோழிக்கு S$15 நிச்சயமாக அதிக விலை தான் என்று கூறியுள்ளார்.