“Your World In Mine” இல் நடித்ததற்காக ரிச்சி கோவிற்கு குவியும் பாராட்டுக்கள் – சிறந்த நடிப்பிற்கான விருதைப் பெறுவாரா ?

richie koh

சேனல் 8 இன் நாடகமான “Your World In Mine” இல் நடித்ததற்காக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறார் மீடியாகார்ப் நடிகர் ரிச்சி கோ. 21வயதான 7வயது அறிவாற்றலை கொண்ட சிறுவன் போல Zheng Tian Cai என்ற பெயர் கொண்ட கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

பார்வையாளர்கள் மற்றும் தொழில்துறையினர் கோவின் நடிப்பைப் பாராட்டி வருகின்றனர் அடுத்த ஆண்டு Star Awards இல் சிறந்த நடிப்பிற்கான விருதுக்கு அவர் பரிந்துரைக்கப்படுவார் என்றும் பரிந்துரைக்கப்பட்டால் அவர் வாங்கும் முதல் விருதாக இது இருக்கும் என்றும் கூறி வருகின்றனர். அவர் 2018 இல் சிறந்த புதுமுகம் மற்றும் இந்த ஆண்டு ரசிகர்களால் வாக்களித்த இரண்டு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கோவின் நடிப்பு நடிகர் Chen Hanwei யையும் கவர்ந்துள்ளது. இன்றுவரை சிறந்த நடிகருக்கான அதிக (7) நட்சத்திர விருதுகளைப் பெற்றவர் Chen Hanwei ஆவார்.

அனைவராலும் காட்டப்படும் பாராட்டுக்கு நன்றி தெரிவித்த கோ,  “எல்லோரும் சிறப்பு வாய்ந்தவர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்,” என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் தனது பாத்திரத்திற்குத் தயாராவதற்காக அறிவாற்றலில் குறைபாடுகள் உள்ள இருவரைச் சந்தித்ததாகவும், தொடரைப் படமாக்கும்போது குறைவாகத் தூங்கியதாகவும், அதனால் அவரது கண்கள் சோர்ந்து இருப்பதாகவும் கூறியுள்ளார். அது மட்டுமில்லாமல் இந்த பாத்திரத்திற்காக அவர் ஜிம்மிற்கு செல்வதை நிறுத்தியதாகவும் , அவர் விரும்பியதை சாப்பிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.