சிங்கப்பூரில் உயரும் வெப்பநிலை: புதிய தொற்றுநோய் ஏற்படும் அபாயம்..!

Rising temperatures could increase risk of new infectious diseases in Singapore
(PHOTO: Suhaimi Abdullah/Getty Images)

சிங்கப்பூரில் உயரும் வெப்பநிலை காரணமாக வேறு வகையான புதிய தொற்றுநோய்கள் நாட்டுக்குள் ஏற்படலாம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட “நேச்சர் க்ளைமேட் சேஞ்ச்” என்ற அறிவியல் இதழின் ஆய்வில் இது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளன.

தன் சொந்த தந்தையையே கொன்ற 19 வயது மகன்… சந்தேகத்தின்பேரில் கைது செய்த போலீஸ்

அதாவது காலநிலை மாற்றம் 200க்கும் மேற்பட்ட தொற்று நோய்களையும், விஷப் பாம்புக் கடி போன்ற பல பரவா அபாயங்களையும் அதிகப்படுத்தியுள்ளது அந்த ஆய்வில் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

அதில் அறியப்பட்ட சுமார் 375 தொற்று நோய்களில் 218 காலநிலை மாற்றத்தால் மோசமாகிவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

அவற்றில் மலேரியா, குரங்கம்மை மற்றும் ஜிகா ஆகிய தொற்றுநோய்களும் அடங்கும்.

சமீபத்திய ஆண்டுகளில், சிங்கப்பூரில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் டெங்கு பாதிப்புகள் அதிகரித்துள்ளன.

சிங்கப்பூரில் வேலையில்லாமல் இருப்போர் எண்ணிக்கை உயர்வு – வெளிநாட்டு ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?