செங்காங்கில் தீ… இருவர் பலி – 150 பேர் வெளியேற்றம்

rivervale-crescent-fire-2-dead
SCDF

செங்காங்கில் உள்ள காண்டோமினியம் வீட்டில் நேற்று (நவ.27) நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது.

9 Rivervale கிரசன்ட், செங்காங்கில் உள்ள காண்டோமினியம் வீட்டில் நள்ளிரவு 1 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) தனது முகநூல் பதிவில் தெரிவித்தது.

தீயணைப்பு வீரர்கள் வந்து பார்த்தபோது, ​​14வது மாடியில் உள்ள வீட்டில் தீப்பிடித்து எரிவதை கண்டனர். பின்னர் உள்ளே நுழைந்து பார்த்தபோது, புகைமூண்ட வீட்டுக்குள் மூன்று பேர் மயக்கமடைந்த நிலையில் இருந்தனர்.

வெளிநாட்டு ஊழியர்கள் உஷார்: பாதுகாப்புடன் இருங்கள்… குறிப்பாக work permit ஊழியர்கள்

அதனை அடுத்து, ஆண் மற்றும் பெண் ஆகிய இருவரும் செங்காங் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர், அங்கு அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்று சிங்கப்பூர் காவல் படை தெரிவித்தது.

இறந்த அந்த இருவருக்கும் 78 வயது. மூன்றாவது நபர், 73 வயது முதியவர், சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்கத்துக்கு பகுதிகளில் இருந்து சுமார் 150 பேர் வெளியேற்றப்பட்டனர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

வேலையில் இருந்து நீக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு – ஊழியர்களின் வயது 35க்கும் குறைவு என்பது அதிர்ச்சி தகவல்