சீனா தனது முதல் ‘போக்குவரத்து போலீஸ் ரோபோ’ -வை பணியில் நியமித்து சாதனை!

China's first robot police have been put to work in the city of Handa in North China's Hebei Province. (PHOTO: The Nation)

சீனாவின் முதல் ரோபோ போலீஸ் தற்போது வட சீனாவின் ஹெபே மாகாணத்தில் உள்ள ஹண்டா நகரில் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை நடைபெற்ற விழாவில் மூன்று வகையான போக்குவரத்து ரோபோ போலீசை பயன்படுத்தப்போவதாக ஹண்டன் பொதுப் பாதுகாப்பு பணியகம் அறிவித்துள்ளது.

இந்த போக்குவரத்து போலீஸ் ரோபோவால், போக்குவரத்துக் குற்றங்களை எளிதில் கண்டறியமுடியும். மேலும், இந்த ரோபோ தவறு செய்வோருக்கு வாய்மொழி எச்சரிக்கை விடுக்கும் திறன் கொண்டது. கூடுதலாக, புகைப்படம் எடுக்கும் திறனும் கொண்டது.

இந்த ரோபோ Big data, செயற்கை நுண்ணறிவு, கிளவுட் கம்ப்யூட்டிங் ஆகியவற்றை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

அழகான மஞ்சள் நிற சீருடை மற்றும் வெள்ளை நிற தொப்பியில் கலக்கும் இந்த போக்குவரத்து போலீஸ் ரோபோ சாலை ரோந்து பணிகளில் ஈடுபடும். ஓட்டுநர்களை அடையாளம் கண்டு, அதன் தானியங்கி அமைப்பு மூலம் சட்டவிரோத செயலில் ஈடுபடுவோரை புகைப்படங்கள் எடுக்கக்கூடிய அதிநவீன திறன் கொண்டது.

அடுத்ததாக, வாடிக்கையாளர் சேவை ரோபோ வாகன பதிவு மையங்களில் பொதுமக்களுக்கு தகவல்களை வழங்கவும், அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிறய வகை ரிமோட்டால் இயக்கப்படும் ரோபோக்கள், வாகன விபத்துக்கள் ஏற்பட்டால் அதை சீர் செய்யவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த போக்குவரத்துக்கு போலீஸ் ரோபோக்கள் 24/7 நேரமும் தொடர்ந்து பணியில் ஈடுபடும் என்பது குறிப்பிடதக்கது.