கருணைக்கொலை செய்யப்பட்ட கழுகு – பூங்காவின் முன்னோடியாக இருந்த எகிப்தியன் பறவைக்கு நேர்ந்தது என்ன?

rod-egyptian-vulture-jurong-bird-park
ஜூரோங் பறவைகள் சரணாலயத்தில் உள்ள Rod எனும் எகிப்திய கழுகு வயது முதிர்ச்சி காரணமாக இறந்து விட்டது.அது சுமார் 60 வயதாக இருந்தது.ஆகஸ்ட் 25, 2022 அன்று மாண்டாய் வனவிலங்கு சரணாலயம் அதன் முகநூல் பக்கத்தில் கழுகின் மரணத்தை அறிவித்தது.
பூங்காவில் இருந்த பறவைகளுக்கெல்லாம் கழுகு முன்னோடி தலைமுறையாக இருந்தது.பூங்கா 1971 இல் திறக்கப்பட்டது.அப்போதே Rod வயது வந்த பறவையாக இருந்ததாக கூறப்படுகிறது.அதாவது அந்த காலகட்டத்தில் அந்த பறவைக்கு 10 வயது ஆகியிருக்கும்.

கழுகு இனங்களில் உலகின் மிகப் பழமையான பறவையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.வயது முதிர்ச்சியின் காரணமாக கழுகு பல்வேறு உடல்நலப் பிரச்சனகளை எதிர்கொண்டிருந்தது.
2018 முதல் மூத்த விலங்கு பராமரிப்பு திட்டத்தின் கீழ் வைக்கப்பட்டது.வயது தொடர்பான சிக்கல்கள் முன்னேறி, அவரது வாழ்க்கைத் தரத்தை கடுமையாக பாதித்தது.

உடலில் ஏற்பட்ட பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள முடியாமல் தவித்த கழுகினை அதன் நலன் கருதி,மனிதாபிமான முறையில் கருணைக்கொலை செய்ய கடினமான முடிவு எடுக்கப்பட்டது.Rod-இன் இன்னுயிர் உடலை விட்டு பிரிந்தது.