மாடியிலிருந்து சிகரெட் துண்டுகளை வீசுவது யார்? – சிங்கப்பூரில் அடிக்கடி அரங்கேறும் சம்பவம்!

(Photo: Jenny Kane/AP)

சிங்கப்பூரில் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிக்கும் பலர் வீட்டில் சேரும் குப்பைகளை முறையாக அப்புறப்படுத்தாமல் பிளாஸ்டிக் பைகளில் கட்டி உயரத்திலிருந்து எறிந்து விடுகின்றனர்.

நாளுக்குநாள் குப்பை வீசியது குறித்த புகார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.கடந்த 4 வருடங்களில் புகார்கள் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.இது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்க்கு நீடித்த நிலைத்தன்மை சுற்றுச்சூழல் அமைச்சர் கிரேஸ் ஃபூ எழுத்துபூர்வமாகப் பதிலளித்துள்ளார்.2019ஆம் ஆண்டுக்கு முன் சராசரியாக – 16,000 புகார்கள் பதிவாகியுள்ளன.

2019 – 22,000,

2020 – 35,000

2021 – 32,000

இவ்வாறு தொடர்ச்சியாக அடுத்தடுத்த ஆண்டுகளில் பதிவான புகார்களில் சுமார் 15 சதவீதத்துடன் சம்பந்தப்பட்டோரை அடையாளம் காணமுடியவில்லை என்று அமைச்சர் ஃபூ கூறினார்.இந்தாண்டில் முழுமையாக 9 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் சுமார் 130 பேர் மீது அமலாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைச்சர் ஃபூ தெரிவித்தார்.

உயரத்திலிருந்து சிகரெட் துண்டுகளை வீசுதல் போன்ற சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.உயரத்திலிருந்து குப்பை வீசிய சம்பவங்களில் 54% சிகரெட் துண்டுகள் வீசப்பட்ட புகார்கள் ஆகும்.95% கண்காணிப்புக் கேமரா வழி அடையாளம் காணப்பட்டவை என்றும் கூறப்படுகிறது.